Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 12

Al-Mu'minun

(al-Muʾminūn)

௧௧௧

اِنِّيْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْٓاۙ اَنَّهُمْ هُمُ الْفَاۤىِٕزُوْنَ ١١١

innī
إِنِّى
நிச்சயமாக நான்
jazaytuhumu
جَزَيْتُهُمُ
அவர்களுக்கு கூலியாகக் கொடுத்தேன்
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
bimā ṣabarū
بِمَا صَبَرُوٓا۟
அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
annahum humu
أَنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
l-fāizūna
ٱلْفَآئِزُونَ
வெற்றியாளர்கள்
(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்). ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௧)
Tafseer
௧௧௨

قٰلَ كَمْ لَبِثْتُمْ فِى الْاَرْضِ عَدَدَ سِنِيْنَ ١١٢

qāla
قَٰلَ
கூறுவான்
kam
كَمْ
எத்தனை
labith'tum
لَبِثْتُمْ
தங்கி இருந்தீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
ʿadada
عَدَدَ
பல
sinīna
سِنِينَ
ஆண்டுகள்
அன்றி "நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?" எனக் கேட்பான். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௨)
Tafseer
௧௧௩

قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ فَسْـَٔلِ الْعَاۤدِّيْنَ ١١٣

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
labith'nā
لَبِثْنَا
தங்கினோம்
yawman
يَوْمًا
ஒரு நாள்
aw
أَوْ
அல்லது
baʿḍa yawmin
بَعْضَ يَوْمٍ
பகுதி நாள்
fasali
فَسْـَٔلِ
நீ கேட்பாயாக
l-ʿādīna
ٱلْعَآدِّينَ
எண்ணக்கூடியவர்களிடம்
அதற்கவர்கள் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!" எனக் கூறுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௩)
Tafseer
௧௧௪

قٰلَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ١١٤

qāla
قَٰلَ
அவன் கூறுவான்
in labith'tum
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًاۖ
குறைவாகவே
law annakum
لَّوْ أَنَّكُمْ
வேண்டுமே
kuntum
كُنتُمْ
நீங்கள் இருந்தீர்கள்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகின்றீர்கள்
அதற்கவன் "ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?" என்று கூறுவான். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௪)
Tafseer
௧௧௫

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ ١١٥

afaḥasib'tum
أَفَحَسِبْتُمْ
எண்ணிக் கொண்டீர்களா
annamā khalaqnākum
أَنَّمَا خَلَقْنَٰكُمْ
நாம் உங்களைப் படைத்ததெல்லாம்
ʿabathan
عَبَثًا
வீணாகத்தான்
wa-annakum
وَأَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ilaynā
إِلَيْنَا
நம்மிடம்
lā tur'jaʿūna
لَا تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள்
("என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?" (என்று கேட்பான்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௫)
Tafseer
௧௧௬

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَقُّۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ رَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ ١١٦

fataʿālā
فَتَعَٰلَى
எனவே மிக உயர்ந்தவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-maliku
ٱلْمَلِكُ
அரசனாகிய
l-ḥaqu
ٱلْحَقُّۖ
உண்மையாளனாகிய
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரிய இறைவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவனை
rabbu
رَبُّ
அதிபதி
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
l-karīmi
ٱلْكَرِيمِ
கண்ணியமிக்க
ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே! ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௬)
Tafseer
௧௧௭

وَمَنْ يَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ لَا بُرْهَانَ لَهٗ بِهٖۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ ١١٧

waman
وَمَن
யார்
yadʿu
يَدْعُ
அழைப்பாரோ
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
வேறு
lā bur'hāna
لَا بُرْهَٰنَ
அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க
lahu
لَهُۥ
அதற்கு
bihi
بِهِۦ
அவரிடம்
fa-innamā ḥisābuhu
فَإِنَّمَا حِسَابُهُۥ
அவருடைய விசாரணையெல்லாம்
ʿinda rabbihi
عِندَ رَبِّهِۦٓۚ
அவரது இறைவனிடம்தான்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதொரு அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிக்கும் இத்தகையவர் வெற்றி பெறமாட்டார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௭)
Tafseer
௧௧௮

وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ ࣖ ١١٨

waqul
وَقُل
கூறுவீராக
rabbi
رَّبِّ
என் இறைவா
igh'fir
ٱغْفِرْ
மன்னிப்பாயாக
wa-ir'ḥam
وَٱرْحَمْ
இன்னும் கருணைபுரிவாயாக
wa-anta
وَأَنتَ
நீ
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
கருணை புரிபவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களிளெல்லாம் நீதான் மிக்க மேலானவன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௮)
Tafseer