فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَآ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَىِٕذٍ وَّلَا يَتَسَاۤءَلُوْنَ ١٠١
- fa-idhā nufikha
- فَإِذَا نُفِخَ
- ஊதப்பட்டால்
- fī l-ṣūri
- فِى ٱلصُّورِ
- சூரில்
- falā ansāba
- فَلَآ أَنسَابَ
- உறவுகள் அறவே இருக்காது
- baynahum yawma-idhin
- بَيْنَهُمْ يَوْمَئِذٍ
- அவர்களுக்கு மத்தியில்/அந்நாளில்
- walā yatasāalūna
- وَلَا يَتَسَآءَلُونَ
- அவர்கள் தங்களுக்குள் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்
சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௧)Tafseer
فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ١٠٢
- faman
- فَمَن
- எனவே, எவர்
- thaqulat
- ثَقُلَتْ
- கனத்தனவோ
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- அவரின் எடைகள்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றி பெற்றவர்கள்
எவர்களுடைய நன்மையின் எடை கணக்கிறதோ அவர்கள்தாம் வெற்றி அடைவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௨)Tafseer
وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ فِيْ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۚ ١٠٣
- waman
- وَمَنْ
- எவர்
- khaffat
- خَفَّتْ
- இலகுவாகி விட்டனவோ
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- அவரின் எடைகள்
- fa-ulāika alladhīna
- فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
- அவர்கள்தான்
- khasirū
- خَسِرُوٓا۟
- நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களுக்குத் தாமே
- fī jahannama
- فِى جَهَنَّمَ
- நரகில்
- khālidūna
- خَٰلِدُونَ
- அவர்கள் நிரந்தரமானவர்கள்
எவர்களுடைய (நன்மையின்) எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௩)Tafseer
تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كَالِحُوْنَ ١٠٤
- talfaḥu
- تَلْفَحُ
- பொசுக்கிவிடும்
- wujūhahumu
- وُجُوهَهُمُ
- அவர்களது முகத்தை
- l-nāru
- ٱلنَّارُ
- நெருப்பு
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- kāliḥūna
- كَٰلِحُونَ
- உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்
அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௪)Tafseer
اَلَمْ تَكُنْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ١٠٥
- alam takun
- أَلَمْ تَكُنْ
- இருந்ததல்லவா
- āyātī
- ءَايَٰتِى
- எனது வசனங்கள்
- tut'lā
- تُتْلَىٰ
- ஓதப்படுகின்றன
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- fakuntum
- فَكُنتُم
- ஆனால், நீங்கள் இருந்தீர்கள்
- bihā
- بِهَا
- அவற்றை
- tukadhibūna
- تُكَذِّبُونَ
- பொய்ப்பிக்கின்றீர்கள்
(அவர்களை நோக்கி) "உங்கள் மீது நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்" (என்று கூறப்படும்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௫)Tafseer
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَاۤلِّيْنَ ١٠٦
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- ghalabat
- غَلَبَتْ
- மிகைத்து விட்டது
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்களை
- shiq'watunā
- شِقْوَتُنَا
- எனவே துர்பாக்கியம்
- wakunnā
- وَكُنَّا
- நாங்கள் இருந்தோம்
- qawman
- قَوْمًا
- மக்களாக
- ḍāllīna
- ضَآلِّينَ
- வழிகெட்டவர்கள்
அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுடைய துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் தவறான வழியில் சென்றுவிட்டோம்" என்று கூறுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௬)Tafseer
رَبَّنَآ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ ١٠٧
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- akhrij'nā
- أَخْرِجْنَا
- எங்களை வெளியேற்று
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- fa-in ʿud'nā
- فَإِنْ عُدْنَا
- திரும்பச் சென்றால்
- fa-innā
- فَإِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- ẓālimūna
- ظَٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்தான்
(அன்றி) "எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளிப்படுத்திவிடு. (பாவம் செய்ய) பின்னும் முற்பட்டால் நாங்கள் மகா அநியாயக்காரர்களாகி விடுவோம்" (என்பார்கள்). ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௭)Tafseer
قَالَ اخْسَـُٔوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ ١٠٨
- qāla
- قَالَ
- அவன் கூறுவான்
- ikh'saū fīhā
- ٱخْسَـُٔوا۟ فِيهَا
- நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள்/அதில்
- walā tukallimūni
- وَلَا تُكَلِّمُونِ
- என்னிடம்பேசாதீர்கள்
அதற்கவன் "அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்" என்று கூறுவான். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௮)Tafseer
اِنَّهٗ كَانَ فَرِيْقٌ مِّنْ عِبَادِيْ يَقُوْلُوْنَ رَبَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ ۚ ١٠٩
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக
- kāna
- كَانَ
- இருந்தார்(கள்)
- farīqun
- فَرِيقٌ
- ஒரு கூட்டம்
- min ʿibādī
- مِّنْ عِبَادِى
- என் அடியார்களில்
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுபவர்களாக
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- fa-igh'fir
- فَٱغْفِرْ
- ஆகவே மன்னித்து விடு
- lanā
- لَنَا
- எங்களை
- wa-ir'ḥamnā
- وَٱرْحَمْنَا
- எங்கள் மீது கருணை புரி
- wa-anta
- وَأَنتَ
- இன்னும் நீ
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தவன்
- l-rāḥimīna
- ٱلرَّٰحِمِينَ
- கருணை புரிபவர்களில்
நிச்சயமாக நம்முடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிளெல்லாம் நீ மிக்க மேலானவன்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௯)Tafseer
فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِيًّا حَتّٰٓى اَنْسَوْكُمْ ذِكْرِيْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ ١١٠
- fa-ittakhadhtumūhum
- فَٱتَّخَذْتُمُوهُمْ
- ஆனால் எடுத்துக்கொண்டீர்கள் அவர்களை
- sikh'riyyan
- سِخْرِيًّا
- பரிகாசமாக
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- ansawkum
- أَنسَوْكُمْ
- அவர்கள் மறக்க வைத்துவிட்டார்கள் உங்களை
- dhik'rī
- ذِكْرِى
- என் நினைவை
- wakuntum
- وَكُنتُم
- நீங்கள் இருந்தீர்கள்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களைப் பார்த்து
- taḍḥakūna
- تَضْحَكُونَ
- சிரிக்கின்றீர்கள்
ஆனால் "நீங்களோ என்னை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௦)Tafseer