Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 10

Al-Mu'minun

(al-Muʾminūn)

௯௧

مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍۗ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَ ۙ ٩١

mā ittakhadha
مَا ٱتَّخَذَ
ஏற்படுத்திக் கொள்ளவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min waladin
مِن وَلَدٍ
எந்த ஒரு குழந்தையையும்
wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
maʿahu
مَعَهُۥ
அவனுடன்
min ilāhin
مِنْ إِلَٰهٍۚ
எந்தக் கடவுளும்
idhan
إِذًا
அப்படி இருந்திருந்தால்
ladhahaba
لَّذَهَبَ
கொண்டு சென்று விடுவார்கள்
kullu
كُلُّ
ஒவ்வொரு
ilāhin
إِلَٰهٍۭ
கடவுளும்
bimā khalaqa
بِمَا خَلَقَ
இன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள்
walaʿalā baʿḍuhum
وَلَعَلَا بَعْضُهُمْ
தான் படைத்ததை
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍۚ
சிலர் மீது
sub'ḥāna
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
ʿammā yaṣifūna
عَمَّا يَصِفُونَ
அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு
அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௧)
Tafseer
௯௨

عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ࣖ ٩٢

ʿālimi
عَٰلِمِ
நன்கறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவையும்
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையையும்
fataʿālā
فَتَعَٰلَىٰ
அவன் மிக உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவைகளை விட அல்லாஹ் மிக்க மேலானவன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௨)
Tafseer
௯௩

قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّيْ مَا يُوْعَدُوْنَ ۙ ٩٣

qul
قُل
கூறுவீராக
rabbi
رَّبِّ
என் இறைவா
immā turiyannī
إِمَّا تُرِيَنِّى
நீ எனக்கு காண்பித்தால்
mā yūʿadūna
مَا يُوعَدُونَ
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை
"என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௩)
Tafseer
௯௪

رَبِّ فَلَا تَجْعَلْنِيْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ ٩٤

rabbi
رَبِّ
என் இறைவா
falā tajʿalnī
فَلَا تَجْعَلْنِى
ஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதே
fī l-qawmi
فِى ٱلْقَوْمِ
மக்களில்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார
என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௪)
Tafseer
௯௫

وَاِنَّا عَلٰٓى اَنْ نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ ٩٥

wa-innā
وَإِنَّا
நிச்சயமாக
ʿalā an nuriyaka
عَلَىٰٓ أَن نُّرِيَكَ
நாம் உமக்கு காண்பிப்பதற்கு
مَا
நாம் வாக்களிப்பதை
naʿiduhum
نَعِدُهُمْ
நாம் வாக்களிப்பதை அவர்களுக்கு
laqādirūna
لَقَٰدِرُونَ
ஆற்றலுடையவர்கள்தான்
ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உங்களுக்குக் காண்பிக்கவும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௫)
Tafseer
௯௬

اِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ السَّيِّئَةَۗ نَحْنُ اَعْلَمُ بِمَا يَصِفُوْنَ ٩٦

id'faʿ
ٱدْفَعْ
தடுப்பீராக
bi-allatī
بِٱلَّتِى
கொண்டு
hiya aḥsanu
هِىَ أَحْسَنُ
மிக அழகிய (குணத்)தை
l-sayi-ata
ٱلسَّيِّئَةَۚ
கெட்டதை
naḥnu
نَحْنُ
நாம்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவர்கள்
bimā yaṣifūna
بِمَا يَصِفُونَ
அவர்கள் வர்ணிக்கின்றவற்றை
(நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் (உங்களைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௬)
Tafseer
௯௭

وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِ ۙ ٩٧

waqul
وَقُل
கூறுவீராக
rabbi
رَّبِّ
என் இறைவா
aʿūdhu bika
أَعُوذُ بِكَ
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
min hamazāti
مِنْ هَمَزَٰتِ
நெறிப்பதை விட்டும்
l-shayāṭīni
ٱلشَّيَٰطِينِ
ஷைத்தான்கள்
அன்றி "என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௭)
Tafseer
௯௮

وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ ٩٨

wa-aʿūdhu bika rabbi
وَأَعُوذُ بِكَ رَبِّ
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா!
an yaḥḍurūni
أَن يَحْضُرُونِ
அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்
என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௮)
Tafseer
௯௯

حَتّٰٓى اِذَا جَاۤءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ ۙ ٩٩

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāa
إِذَا جَآءَ
வந்தால்
aḥadahumu
أَحَدَهُمُ
ஒருவருக்கு அவர்களில்
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
qāla
قَالَ
அவன் கூறுகிறான்
rabbi
رَبِّ
என் இறைவா!
ir'jiʿūni
ٱرْجِعُونِ
என்னை திருப்பு
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௯)
Tafseer
௧௦௦

لَعَلِّيْٓ اَعْمَلُ صَالِحًا فِيْمَا تَرَكْتُ كَلَّاۗ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَاۤىِٕلُهَاۗ وَمِنْ وَّرَاۤىِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ ١٠٠

laʿallī aʿmalu
لَعَلِّىٓ أَعْمَلُ
நான் செய்வதற்காக
ṣāliḥan
صَٰلِحًا
நல்ல அமல்களை
fīmā taraktu
فِيمَا تَرَكْتُۚ
நான் விட்டுவிட்டவற்றிலிருந்து
kallā
كَلَّآۚ
ஒரு போதும் அவ்வாறு அல்ல
innahā
إِنَّهَا
நிச்சயமாக இது
kalimatun
كَلِمَةٌ
ஒரு பேச்சாகும்
huwa
هُوَ
அவன்
qāiluhā
قَآئِلُهَاۖ
அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான்
wamin
وَمِن
இருக்கிறது
warāihim
وَرَآئِهِم
அவர்களுக்கு முன்
barzakhun
بَرْزَخٌ
ஒரு தடை
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
yub'ʿathūna
يُبْعَثُونَ
எழுப்பப்படுகின்ற
நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கிவிடுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௦)
Tafseer