௧
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۙ ١
- qad aflaḥa
- قَدْ أَفْلَحَ
- வெற்றி பெற்று விட்டார்கள்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧)Tafseer
௨
الَّذِيْنَ هُمْ فِيْ صَلٰو تِهِمْ خَاشِعُوْنَ ٢
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- hum
- هُمْ
- அவர்கள்
- fī ṣalātihim
- فِى صَلَاتِهِمْ
- தங்கள் தொழுகையில்
- khāshiʿūna
- خَٰشِعُونَ
- உள்ளச்சமுடையவர்கள்
அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨)Tafseer
௩
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ ۙ ٣
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُمْ
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- ʿani l-laghwi
- عَنِ ٱللَّغْوِ
- வீணான விஷயங்களை விட்டு
- muʿ'riḍūna
- مُعْرِضُونَ
- விலகியவர்கள்
அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩)Tafseer
௪
وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَ ۙ ٤
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُمْ
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- lilzzakati
- لِلزَّكَوٰةِ
- ஸகாத்தை
- fāʿilūna
- فَٰعِلُونَ
- நிறைவேற்றக்கூடியவர்கள்
அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪)Tafseer
௫
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۙ ٥
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُمْ
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- lifurūjihim
- لِفُرُوجِهِمْ
- தங்கள் மர்மஸ்தலங்களை
- ḥāfiẓūna
- حَٰفِظُونَ
- பாதுகாக்கக் கூடியவர்கள்
அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫)Tafseer
௬
اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ ٦
- illā
- إِلَّا
- தவிர
- ʿalā azwājihim
- عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ
- தங்கள் மனைவியர்களிடம்
- aw
- أَوْ
- அல்லது
- mā malakat
- مَا مَلَكَتْ
- சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்
- aymānuhum
- أَيْمَٰنُهُمْ
- தங்கள் வலக்கரங்கள்
- fa-innahum
- فَإِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- ghayru
- غَيْرُ
- அல்லர்
- malūmīna
- مَلُومِينَ
- பழிக்கப்படுபவர்கள்
எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬)Tafseer
௭
فَمَنِ ابْتَغٰى وَرَاۤءَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۚ ٧
- famani
- فَمَنِ
- யார்
- ib'taghā
- ٱبْتَغَىٰ
- தேடுவார்களோ
- warāa
- وَرَآءَ
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَ
- அதற்கு
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-ʿādūna
- ٱلْعَادُونَ
- எல்லை மீறிகள்
இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭)Tafseer
௮
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ ٨
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُمْ
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- li-amānātihim
- لِأَمَٰنَٰتِهِمْ
- தங்கள் அமானிதங்களையும்
- waʿahdihim
- وَعَهْدِهِمْ
- இன்னும் தங்கள் உடன்படிக்கையையும்
- rāʿūna
- رَٰعُونَ
- பேணக்கூடியவர்கள்
அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து, ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮)Tafseer
௯
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ ۘ ٩
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُمْ
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- ʿalā ṣalawātihim
- عَلَىٰ صَلَوَٰتِهِمْ
- தங்கள் தொழுகைகளை
- yuḥāfiẓūna
- يُحَافِظُونَ
- பாதுகாப்பார்கள்
தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯)Tafseer
௧௦
اُولٰۤىِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ ١٠
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- humu
- هُمُ
- அவர்கள்தான்
- l-wārithūna
- ٱلْوَٰرِثُونَ
- சொந்தமாக்கிக் கொள்பவர்கள்
இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦)Tafseer