Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௯

Qur'an Surah Al-Hajj Verse 9

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثَانِيَ عِطْفِهٖ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗ لَهٗ فِى الدُّنْيَا خِزْيٌ وَّنُذِيْقُهٗ يَوْمَ الْقِيٰمَةِ عَذَابَ الْحَرِيْقِ (الحج : ٢٢)

thāniya ʿiṭ'fihi
ثَانِىَ عِطْفِهِۦ
Twisting his neck
தனது கழுத்தைத் திருப்பியவனாக
liyuḍilla
لِيُضِلَّ
to mislead
தடுப்பதற்காக
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
மார்க்கத்திலிருந்து
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah
அல்லாஹ்வின்
lahu
لَهُۥ
For him
அவனுக்கு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
in the world
இவ்வுலகத்தில்
khiz'yun
خِزْىٌۖ
(is) disgrace
கேவலம் உண்டு
wanudhīquhu
وَنُذِيقُهُۥ
and We will make him taste
நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) Resurrection
மறுமை நாளில்
ʿadhāba l-ḥarīqi
عَذَابَ ٱلْحَرِيقِ
(the) punishment (of) the Burning Fire
பொசுக்கக்கூடிய வேதனையை

Transliteration:

Saaniya 'itfihee liyudilla 'an sabeelil laahi lahoo fiddun yaa khizyunw wa nuzeequhoo Yawmal Qiyaamati 'azaabal lhareeq (QS. al-Ḥajj:9)

English Sahih International:

Twisting his neck [in arrogance] to mislead [people] from the way of Allah. For him in the world is disgrace, and We will make him taste on the Day of Resurrection the punishment of the Burning Fire [while it is said], (QS. Al-Hajj, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்.) இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௯)

Jan Trust Foundation

(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனது கழுத்தைத் திருப்பியவனாக (-பெருமையடித்து புறக்கணித்தவனாக) அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அவன் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிக்கின்றான். அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (-தண்டனை) உண்டு. மறுமை நாளில் பொசுக்கக்கூடிய வேதனையை நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம். (அவனை நெருப்பால் பொசுக்குவோம்.)