குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௮
Qur'an Surah Al-Hajj Verse 8
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَّلَا كِتٰبٍ مُّنِيْرٍ ۙ (الحج : ٢٢)
- wamina l-nāsi
- وَمِنَ ٱلنَّاسِ
- And among mankind
- மனிதர்களில்
- man yujādilu
- مَن يُجَٰدِلُ
- (is he) who disputes
- எவர்/தர்க்கிப்பார்
- fī l-lahi
- فِى ٱللَّهِ
- concerning Allah
- அல்லாஹ்வின் விஷயத்தில்
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍ
- without any knowledge
- எவ்வித அறிவுமில்லாமலும்
- walā hudan
- وَلَا هُدًى
- and not any guidance
- நேர்வழி இல்லாமலும்
- walā kitābin
- وَلَا كِتَٰبٍ
- and not a Book
- வேதமும் இல்லாமலும்
- munīrin
- مُّنِيرٍ
- enlightening
- வெளிப்படுத்தக்கூடிய
Transliteration:
Wa minan naasi mai yujaadilu fil laahi bighairi 'ilminw wa laa hudanw wa laa Kitaabim Muneer(QS. al-Ḥajj:8)
English Sahih International:
And of the people is he who disputes about Allah without knowledge or guidance or an enlightening book [from Him], (QS. Al-Hajj, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) யாதொரு கல்வியும், யாதொரு தர்க்கரீதியான ஆதாரமும், யாதொரு வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௮)
Jan Trust Foundation
இன்னும்| கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற விஷயத்தில்) எவ்வித அறிவுமில்லாமலும் நேர்வழி (-தெளிவான விளக்கம் ஆதாரம்) இல்லாமலும் (அவனுடைய வாதத்தை) வெளிப்படுத்தக்கூடிய (-தெளிவுபடுத்தக்கூடிய இறை)வேதமும் இல்லாமலும் தர்க்கிப்பவர் மனிதர்களில் இருக்கின்றார்.