Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௮

Qur'an Surah Al-Hajj Verse 78

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖۗ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍۗ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَۗ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِيْنَ ەۙ مِنْ قَبْلُ وَفِيْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَاۤءَ عَلَى النَّاسِۖ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ۗهُوَ مَوْلٰىكُمْۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ ࣖ ۔ (الحج : ٢٢)

wajāhidū
وَجَٰهِدُوا۟
And strive
போரிடுங்கள்
fī l-lahi
فِى ٱللَّهِ
for Allah
அல்லாஹ்வின் பாதையில்
ḥaqqa
حَقَّ
(with the) striving due (to) Him
முழுமையாக
jihādihi
جِهَادِهِۦۚ
(with the) striving due (to) Him
போரிடுவதாக
huwa
هُوَ
He
அவன்தான்
ij'tabākum
ٱجْتَبَىٰكُمْ
(has) chosen you
உங்களைத் தேர்ந்தெடுத்தான்
wamā jaʿala
وَمَا جَعَلَ
and not placed
அவன் வைக்கவில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
fī l-dīni
فِى ٱلدِّينِ
in the religion
மார்க்கத்தில்
min ḥarajin
مِنْ حَرَجٍۚ
any difficulty
எவ்வித நெருக்கடியையும்
millata
مِّلَّةَ
(The) religion
மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள்
abīkum
أَبِيكُمْ
(of) your father
உங்கள் தந்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَۚ
Ibrahim
இப்றாஹீமுடைய
huwa
هُوَ
He
அவன்
sammākumu
سَمَّىٰكُمُ
named you
உங்களுக்கு பெயர் வைத்தான்
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
Muslims
முஸ்லிம்கள்
min qablu
مِن قَبْلُ
before before
இதற்கு முன்னரும்
wafī hādhā
وَفِى هَٰذَا
and in this
இதிலும்
liyakūna
لِيَكُونَ
that may be
இருப்பதற்காகவும்
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
தூதர்
shahīdan
شَهِيدًا
a witness
சாட்சியாளராக
ʿalaykum
عَلَيْكُمْ
over you
உங்கள் மீது
watakūnū
وَتَكُونُوا۟
and you may be
இன்னும் நீங்கள் இருப்பதற்காக
shuhadāa
شُهَدَآءَ
witnesses
சாட்சியாளர்களாக
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِۚ
on the mankind
மக்கள் மீது
fa-aqīmū
فَأَقِيمُوا۟
So establish
ஆகவே நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
and give
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
ஸகாத்தை
wa-iʿ'taṣimū
وَٱعْتَصِمُوا۟
and hold fast
உறுதியாக நம்புங்கள்
bil-lahi
بِٱللَّهِ
to Allah
அல்லாஹ்வை
huwa
هُوَ
He
அவன்தான்
mawlākum
مَوْلَىٰكُمْۖ
(is) your Protector
உங்கள் பொறுப்பாளன்
faniʿ'ma
فَنِعْمَ
so an Excellent
அவன் சிறந்தவன்
l-mawlā
ٱلْمَوْلَىٰ
[the] Protector
பொறுப்பாளன் (எஜமானன்)
waniʿ'ma
وَنِعْمَ
and an Excellent
அவன் சிறந்தவன்
l-naṣīru
ٱلنَّصِيرُ
[the] Helper
உதவியாளன்

Transliteration:

Wa jaahidoo fil laahi haqqa jihaadih; Huwaj tabaakum wa maa ja'ala 'alaikum fid deeni min haraj; Millata abeekum Ibraaheem; Huwa sammaakumul muslimeena min qablu wa fee haaza li yakoonar Rasoolu shaheedan 'alaikum wa takoonoo shuhadaaa'a 'alan naas; fa aqeemus salaata wa aatuz zakaata wa'tasimoo billaahi Huwa mawlaakum fani'mal mawlaa wa ni'man naseer (QS. al-Ḥajj:78)

English Sahih International:

And strive for Allah with the striving due to Him. He has chosen you and has not placed upon you in the religion any difficulty. [It is] the religion of your father, Abraham. He [i.e., Allah] named you "Muslims" before [in former scriptures] and in this [revelation] that the Messenger may be a witness over you and you may be witnesses over the people. So establish prayer and give Zakah and hold fast to Allah. He is your protector; and excellent is the protector, and excellent is the helper. (QS. Al-Hajj, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௮)

Jan Trust Foundation

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் பாதையில் (இணை வைப்பவர்களிடம்) முழுமையாக போரிடுங்கள். அவன்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் மீது (உங்கள்) மார்க்கத்தில் எவ்வித நெருக்கடியையும் அவன் வைக்கவில்லை. உங்கள் தந்தை இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள். அவன் (-அல்லாஹ்) இதற்கு முன்னரும் (முந்தைய வேதங்களிலும்) இதிலும் (-குர்ஆனிலும்) உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’என்று பெயர் வைத்தான். தூதர் (-முஹம்மது) உங்கள் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் மக்கள் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து, முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்). ஆகவே, தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஸகாத்தைக் கொடுங்கள், அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள். அவன்தான் உங்கள் பொறுப்பாளன். அவன் சிறந்த பொறுப்பாளன். அவன் சிறந்த உதவியாளன்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...