Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௩

Qur'an Surah Al-Hajj Verse 73

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ۗاِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ۗوَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْـًٔا لَّا يَسْتَنْقِذُوْهُ مِنْهُۗ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ (الحج : ٢٢)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind! O mankind!
மக்களே
ḍuriba
ضُرِبَ
Is set forth
விவரிக்கப்படுகிறது
mathalun
مَثَلٌ
an example
ஓர் உதாரணம்
fa-is'tamiʿū
فَٱسْتَمِعُوا۟
so listen
செவிமடுத்து கேளுங்கள்
lahu
لَهُۥٓۚ
to it
அதை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna tadʿūna
ٱلَّذِينَ تَدْعُونَ
those whom you invoke
நீங்கள் அழைக்கின்றவை
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides Allah besides Allah besides Allah
அல்லாஹ்வையன்றி
lan yakhluqū
لَن يَخْلُقُوا۟
will never create
அறவே படைக்க மாட்டார்கள்
dhubāban
ذُبَابًا
a fly
ஒரு ஈயையும்
walawi ij'tamaʿū lahu
وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥۖ
even if they gathered together for it
அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரி/அதற்கு
wa-in yaslub'humu
وَإِن يَسْلُبْهُمُ
And if snatched away from them
அதைப் பறித்தால்/அவர்களிடமிருந்து
l-dhubābu
ٱلذُّبَابُ
the fly
shayan
شَيْـًٔا
a thing
எதையும்
lā yastanqidhūhu
لَّا يَسْتَنقِذُوهُ
not they (could) take it back
அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்/அதை
min'hu
مِنْهُۚ
from it
அதனிடமிருந்து
ḍaʿufa
ضَعُفَ
So weak
பலவீனமானவர்(களே)
l-ṭālibu
ٱلطَّالِبُ
(are) the seeker
தேடக்கூடியதும்
wal-maṭlūbu
وَٱلْمَطْلُوبُ
and the one who is sought
தேடப்படுவதும்

Transliteration:

Yaaa ayyuhan naasu duriba masalun fastami'oo lah; innal lazeena tad'oona min doonil laahi lai yakhluqoo zubaabanw wa lawijtama'oo lahoo wa iny yaslub humuz zubbabu shai'al laa yastan qizoohu minh; da'ufat taalibu walmatloob (QS. al-Ḥajj:73)

English Sahih International:

O people, an example is presented, so listen to it. Indeed, those you invoke besides Allah will never create [as much as] a fly, even if they gathered together for it [i.e., that purpose]. And if the fly should steal from them a [tiny] thing, they could not recover it from him. Weak are the pursuer and pursued. (QS. Al-Hajj, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே! (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௩)

Jan Trust Foundation

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! ஓர் உதாரணம் (உங்களுக்கு) விவரிக்கப்படுகிறது. அதை செவிமடுத்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்றவை (-வணங்குகின்றவை) ஒரு ஈயையும் அறவே படைக்க மாட்டார்கள், அவர்கள் அதற்கு ஒன்று சேர்ந்தாலும் சரி. அவர்களிடமிருந்து ஈ எதையும் பறித்தாலும் அதை அதனிடமிருந்து அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள். தேடக்கூடியதும் (-அவர்களுடைய கடவுள்களும்) தேடப்படுவதும் (-ஈயும்) பலவீனமானவர்களே!