Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௨

Qur'an Surah Al-Hajj Verse 72

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ تَعْرِفُ فِيْ وُجُوْهِ الَّذِيْنَ كَفَرُوا الْمُنْكَرَۗ يَكَادُوْنَ يَسْطُوْنَ بِالَّذِيْنَ يَتْلُوْنَ عَلَيْهِمْ اٰيٰتِنَاۗ قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْۗ اَلنَّارُۗ وَعَدَهَا اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْاۗ وَبِئْسَ الْمَصِيْرُ ࣖ (الحج : ٢٢)

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
And when are recited
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
Our Verses
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
clear
தெளிவான
taʿrifu
تَعْرِفُ
you will recognize
நீர் பார்ப்பீர்
fī wujūhi
فِى وُجُوهِ
on (the) faces
முகங்களில்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
(of) those who disbelieve
நிராகரித்தவர்களுடைய
l-munkara
ٱلْمُنكَرَۖ
the denial
விரும்பாததை
yakādūna
يَكَادُونَ
They almost
அவர்கள் முயற்சிக்கின்றனர்
yasṭūna
يَسْطُونَ
attack
கடுமையாகப் பிடித்து விடுவதற்கு
bi-alladhīna yatlūna
بِٱلَّذِينَ يَتْلُونَ
those who recite
ஓதிக் காட்டுபவர்களை
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்களுக்கு முன்
āyātinā
ءَايَٰتِنَاۗ
Our Verses
நமது வசனங்களை
qul
قُلْ
Say
நீர் கூறுவீராக
afa-unabbi-ukum
أَفَأُنَبِّئُكُم
"Then shall I inform you
நான் உங்களுக்கு அறிவிக்கவா
bisharrin
بِشَرٍّ
of worse
வெறுப்பானதை
min dhālikumu
مِّن ذَٰلِكُمُۗ
than that?
இவர்களைவிட
l-nāru
ٱلنَّارُ
The Fire
நரகம்
waʿadahā
وَعَدَهَا
Allah (has) promised it
அதை வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
Allah (has) promised it
அல்லாஹ்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
(for) those who disbelieve
நிராகரித்தவர்களுக்கு
wabi'sa
وَبِئْسَ
and wretched
அது மிகக் கெட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
(is) the destination"
மீளுமிடங்களில்

Transliteration:

Wa izaa tutlaa 'laihim Aayaatunaa baiyinaatin ta'rifu fee wujoohil lazeena kafarul munkara yakaadoona yastoona bil lazeena yatloona 'alaihim Aayaatinaa; qul afa unab bi'ukum bisharrim min zaalikum; an Naaru wa 'adahal laahul lazeena kafaroo wa bi'sal maseer (QS. al-Ḥajj:72)

English Sahih International:

And when Our verses are recited to them as clear evidences, you recognize in the faces of those who disbelieve disapproval. They are almost on the verge of assaulting those who recite to them Our verses. Say, "Then shall I inform you of [what is] worse than that? [It is] the Fire which Allah has promised those who disbelieve, and wretched is the destination." (QS. Al-Hajj, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதனை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீங்கள் காண்பீர்கள். நம்முடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நான் உங்களுக்கு இதனைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதனையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவருக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௨)

Jan Trust Foundation

இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்| அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்களுடைய முகங்களில் (நீங்கள்) விரும்பாததை (-முக சுளிப்பை) நீர் பார்ப்பீர்! நமது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுபவர்களை கடுமையாகப் பிடித்து விடுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “இவர்களைவிட வெறுப்பானதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” (அதுதான்) நரகம். நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ் அதை வாக்களித்துள்ளான். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது.