குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௬௭
Qur'an Surah Al-Hajj Verse 67
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا يُنَازِعُنَّكَ فِى الْاَمْرِ وَادْعُ اِلٰى رَبِّكَۗ اِنَّكَ لَعَلٰى هُدًى مُّسْتَقِيْمٍ (الحج : ٢٢)
- likulli
- لِّكُلِّ
- For every
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- nation
- சமுதாயத்திற்கும்
- jaʿalnā
- جَعَلْنَا
- We have made
- நாம் ஏற்படுத்தினோம்
- mansakan
- مَنسَكًا
- rite(s)
- ஒரு பலியை
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- nāsikūhu
- نَاسِكُوهُۖ
- perform it
- அதைபலியிடுவார்கள்
- falā yunāziʿunnaka
- فَلَا يُنَٰزِعُنَّكَ
- So let them not dispute with you So let them not dispute with you
- ஆகவே அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டாம்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِۚ
- in the matter
- அந்த விஷயத்தில்
- wa-ud'ʿu
- وَٱدْعُ
- but invite (them)
- அழைப்பீராக
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbika
- رَبِّكَۖ
- your Lord
- உமது இறைவனின்
- innaka
- إِنَّكَ
- Indeed, you
- நிச்சயமாக நீர்
- laʿalā hudan
- لَعَلَىٰ هُدًى
- (are) surely on guidance
- வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- straight
- நேரான
Transliteration:
Likulli ummatin ja'alnaa mansakan hum naasikoohu falaa yunaazi 'unnaka fil amr; wad'u ilaa Rabbika innaka la 'alaa hudam mustaqeem(QS. al-Ḥajj:67)
English Sahih International:
For every [religious] community We have appointed rites which they perform. So, [O Muhammad], let them [i.e., the disbelievers] not contend with you over the matter but invite [them] to your Lord. Indeed, you are upon straight guidance. (QS. Al-Hajj, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உங்களுடைய காலத்தில் உங்களுக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உங்களுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். அன்றி, நீங்கள் அவர்களை உங்களுடைய இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழையுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான வழியில்தான் இருக்கின்றீர்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௬௭)
Jan Trust Foundation
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்| நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் ஒரு பலியை (பிராணிகளை அறுக்கின்ற முறையை) ஏற்படுத்தினோம். அவர்கள் அதை (அதன்படி) பலியிடுவார்கள். ஆகவே, அவர்கள் உம்மிடம் அந்த விஷயத்தில் (-அறுத்ததை சாப்பிடுவதிலும் இறந்து விட்டதை தவிர்த்து விடுவதிலும்) தர்க்கிக்க வேண்டாம். உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேரான வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்.