Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௬௧

Qur'an Surah Al-Hajj Verse 61

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ (الحج : ٢٢)

dhālika
ذَٰلِكَ
That
அது
bi-anna
بِأَنَّ
(is) because
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yūliju
يُولِجُ
causes to enter
நுழைக்கிறான்
al-layla
ٱلَّيْلَ
the night
இரவை
fī l-nahāri
فِى ٱلنَّهَارِ
in (to) the day
பகலில்
wayūliju
وَيُولِجُ
and causes to enter
நுழைக்கிறான்
l-nahāra fī al-layli
ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ
the day in (to) the night
பகலை / இரவில்
wa-anna
وَأَنَّ
And indeed
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌۢ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
baṣīrun
بَصِيرٌ
All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Zaalika bi annal laaha yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa annal laaha Samee'um Baseer (QS. al-Ḥajj:61)

English Sahih International:

That is because Allah causes the night to enter the day and causes the day to enter the night and because Allah is Hearing and Seeing. (QS. Al-Hajj, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்ட வனாகவும் ஆக்கிவிடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௬௧)

Jan Trust Foundation

அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்| நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (பாதிக்கப்பட்டவருக்கு நான் செய்த உதவி ஏனெனில் நான் அதற்கு ஆற்றல் உள்ளவன்). இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். இன்னும் (இப்படிப்பட்ட ஆற்றல் உள்ளவன் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி புரிய ஆற்றல் உடையவன்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.