குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௪
Qur'an Surah Al-Hajj Verse 54
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّلِيَعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْۗ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (الحج : ٢٢)
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- And that may know
- (முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்)
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- those who have been given
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- the knowledge
- அறிவு
- annahu
- أَنَّهُ
- that it
- நிச்சயமாக இது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- (is) the truth
- உண்மைதான்
- min rabbika
- مِن رَّبِّكَ
- from your Lord
- உமது இறைவன் புறத்திலிருந்து
- fayu'minū
- فَيُؤْمِنُوا۟
- and they believe
- நம்பிக்கை கொண்டு
- bihi
- بِهِۦ
- in it
- அதை
- fatukh'bita
- فَتُخْبِتَ
- and may humbly submit
- பணிந்து விடும்
- lahu
- لَهُۥ
- to it
- அதற்கு
- qulūbuhum
- قُلُوبُهُمْۗ
- their hearts
- அவர்களுடைய உள்ளங்கள்
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- lahādi
- لَهَادِ
- (is) surely (the) Guide
- வழிகாட்டக் கூடியவன்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- (of) those who believe
- நம்பிக்கை கொண்டவர்களை
- ilā ṣirāṭin
- إِلَىٰ صِرَٰطٍ
- to a Path
- பாதைக்கு
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- Straight
- நேரான
Transliteration:
Wa liya'lamal lazeena ootul 'ilma annahul haqqu mir Rabbika fa yu'minoo bihee fatukhbita ahoo quloobuhum; wa innal laaha lahaadil lazeena aamanoo ilaa Siraatim Mustaqeem(QS. al-Ḥajj:54)
English Sahih International:
And so those who were given knowledge may know that it is the truth from your Lord and [therefore] believe in it, and their hearts humbly submit to it. And indeed is Allah the Guide of those who have believed to a straight path. (QS. Al-Hajj, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு கட்டுப்படுவார்கள். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௪)
Jan Trust Foundation
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்| திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(முடிவில், அல்லாஹ்வின் மார்க்க) அறிவு கொடுக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இது (-அல்லாஹ் இறக்கிய வேதமும் ஷைத்தான் கூறியதை நீக்கி வேத வசனங்களை சுத்தப்படுத்தி உறுதிப்படுத்தியதும்) உமது இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த உண்மைதான் என்று அறிந்து அதை நம்பிக்கை கொண்டு அவர்களுடைய உள்ளங்கள் அதற்கு (-அந்த குர்ஆனுக்கு) பணிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டக்கூடியவன் ஆவான்.