Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௩

Qur'an Surah Al-Hajj Verse 53

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّيَجْعَلَ مَا يُلْقِى الشَّيْطٰنُ فِتْنَةً لِّلَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِيَةِ قُلُوْبُهُمْۗ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ۙ (الحج : ٢٢)

liyajʿala
لِّيَجْعَلَ
That He may make
(முடிவில்)ஆக்குவான்
mā yul'qī
مَا يُلْقِى
what the Shaitaan throws
கூறுவதை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan throws
ஷைத்தான்
fit'natan
فِتْنَةً
a trial
சோதனையாக
lilladhīna fī qulūbihim
لِّلَّذِينَ فِى قُلُوبِهِم
for those in their hearts
எவர்களுக்கு/அவர்களுடைய உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
(is) a disease
நோய்
wal-qāsiyati
وَٱلْقَاسِيَةِ
and (are) hardened
இன்னும் இறுகியவர்களுக்கு
qulūbuhum
قُلُوبُهُمْۗ
their hearts
அவர்கள் உள்ளங்கள்
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்கள்
lafī shiqāqin
لَفِى شِقَاقٍۭ
(are) surely, in schism
முரண்பாட்டில்தான் இருக்கின்றனர்
baʿīdin
بَعِيدٍ
far
மிக தூரமான

Transliteration:

Liyaj'ala maa yulqish Shaitaanu fitnatal lillazeena fee quloobihim maradunw walqaasiyati quloobuhum; wa innaz zaalimeena lafee shiqaaqim ba'eed (QS. al-Ḥajj:53)

English Sahih International:

[That is] so He may make what Satan throws in [i.e., asserts] a trial for those within whose hearts is disease and those hard of heart. And indeed, the wrongdoers are in extreme dissension. (QS. Al-Hajj, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௩)

Jan Trust Foundation

ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முடிவில்,) ஷைத்தான் கூறுவதை உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கும் உள்ளங்கள் இறுகியவர்களுக்கும் சோதனையாக ஆக்குவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் (உண்மையை விட்டு) மிக தூரமான முரண்பாட்டில்தான் இருக்கின்றனர்.