Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௨

Qur'an Surah Al-Hajj Verse 52

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِيٍّ اِلَّآ اِذَا تَمَنّٰىٓ اَلْقَى الشَّيْطٰنُ فِيْٓ اُمْنِيَّتِهٖۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ (الحج : ٢٢)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
min qablika
مِن قَبْلِكَ
before you before you
உமக்கு முன்னர்
min rasūlin
مِن رَّسُولٍ
any Messenger
எந்த தூதரையும்
walā nabiyyin
وَلَا نَبِىٍّ
and not a Prophet
நபியையும்
illā
إِلَّآ
but
தவிர
idhā tamannā
إِذَا تَمَنَّىٰٓ
when he recited
அவர் ஓதும்போது
alqā
أَلْقَى
threw
கூறினான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
fī um'niyyatihi
فِىٓ أُمْنِيَّتِهِۦ
in his recitation
அவர் ஓதுவதில்
fayansakhu
فَيَنسَخُ
But Allah abolishes
பின்னர் போக்கி விடுவான்
l-lahu
ٱللَّهُ
But Allah abolishes
அல்லாஹ்
mā yul'qī l-shayṭānu
مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ
what throws the Shaitaan
ஷைத்தான் கூறுவதை
thumma
ثُمَّ
then
பிறகு
yuḥ'kimu
يُحْكِمُ
Allah will establish
உறுதிப்படுத்துவான்
l-lahu
ٱللَّهُ
Allah will establish
அல்லாஹ்
āyātihi
ءَايَٰتِهِۦۗ
His Verses
தனது வசனங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Wa maaa arsalnaa min qablika mir Rasoolinnw wa laa Nabiyyin illaaa izaaa tamannaaa alqash Shaitaanu feee umniy yatihee fa yansakhul laahu maa yulqish Shaitaanu summa yuhkimul laahu aayaatih; wallaahu 'Aleemun Hakeem (QS. al-Ḥajj:52)

English Sahih International:

And We did not send before you any messenger or prophet except that when he spoke [or recited], Satan threw into it [some misunderstanding]. But Allah abolishes that which Satan throws in; then Allah makes precise His verses. And Allah is Knowing and Wise. (QS. Al-Hajj, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், தூதரும் (எதையும்) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர்தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்தி விடுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௨)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு முன்னர் எந்த ஒரு ரசூலையும் நபியையும் நாம் அனுப்பவில்லை, அவர் ஓதும்போது ஷைத்தான் அவர் ஓதுவதில் (தனது கூற்றை) கூறியே தவிர. பின்னர், ஷைத்தான் கூறுவதை அல்லாஹ் போக்கி விடுவான். பிறகு அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்துவான். (வேதத்திலிருந்து ஷைத்தான் கூறியதை நீக்கி வேதத்தை சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.