குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫
Qur'an Surah Al-Hajj Verse 5
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِيْ رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْۗ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَاۤءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْٓا اَشُدَّكُمْۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْـًٔاۗ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَآ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاۤءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ (الحج : ٢٢)
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- O mankind! O mankind!
- மக்களே
- in kuntum
- إِن كُنتُمْ
- If you are
- நீங்கள் இருந்தால்
- fī raybin
- فِى رَيْبٍ
- in doubt
- சந்தேகத்தில்
- mina l-baʿthi
- مِّنَ ٱلْبَعْثِ
- about the Resurrection
- எழுப்பப்படுவதில்
- fa-innā
- فَإِنَّا
- then indeed, We
- நிச்சயமாக நாம்தான்
- khalaqnākum
- خَلَقْنَٰكُم
- We created you
- உங்களைப் படைத்தோம்
- min turābin
- مِّن تُرَابٍ
- from dust
- மண்ணிலிருந்து
- thumma
- ثُمَّ
- then
- பின்னர்
- min nuṭ'fatin
- مِن نُّطْفَةٍ
- from a semen-drop
- இந்திரியத்திலிருந்தும்
- thumma
- ثُمَّ
- then
- பின்னர்
- min ʿalaqatin
- مِنْ عَلَقَةٍ
- from a clinging substance
- இரத்தக் கட்டியிலிருந்தும்
- thumma
- ثُمَّ
- then
- பின்னர்
- min muḍ'ghatin
- مِن مُّضْغَةٍ
- from an embryonic lump
- சதைத்துண்டிலிருந்து
- mukhallaqatin
- مُّخَلَّقَةٍ
- formed
- முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட
- waghayri mukhallaqatin
- وَغَيْرِ مُخَلَّقَةٍ
- and unformed and unformed
- முழுமையான உருவம் கொடுக்கப்படாத
- linubayyina
- لِّنُبَيِّنَ
- that We may make clear
- ஏனெனில் விவரிப்பதற்காக
- lakum
- لَكُمْۚ
- to you
- உங்களுக்கு
- wanuqirru
- وَنُقِرُّ
- And We cause to remain
- தங்க வைக்கிறோம்
- fī l-arḥāmi
- فِى ٱلْأَرْحَامِ
- in the wombs
- கர்ப்பப் பைகளில்
- mā nashāu
- مَا نَشَآءُ
- what We will
- நாம் நாடியதை
- ilā
- إِلَىٰٓ
- for
- வரை
- ajalin
- أَجَلٍ
- a term
- தவணை
- musamman
- مُّسَمًّى
- appointed
- குறிப்பிட்ட
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- nukh'rijukum
- نُخْرِجُكُمْ
- We bring you out
- உங்களை வெளியாக்குகிறோம்
- ṭif'lan
- طِفْلًا
- (as) a child
- குழந்தைகளாக
- thumma
- ثُمَّ
- [then]
- பிறகு
- litablughū
- لِتَبْلُغُوٓا۟
- that you may reach
- நீங்கள் அடைவதற்காக
- ashuddakum
- أَشُدَّكُمْۖ
- [your] maturity
- வலிமையையும் உங்களது
- waminkum
- وَمِنكُم
- And among you
- உங்களில்
- man yutawaffā
- مَّن يُتَوَفَّىٰ
- (is he) who dies
- உயிர் கைப்பற்றப்படுகின்றவரும்
- waminkum
- وَمِنكُم
- and among you
- இன்னும் உங்களில்
- man
- مَّن
- (is he) who
- எவர்
- yuraddu
- يُرَدُّ
- is returned
- திருப்பப்படுகின்றார்
- ilā
- إِلَىٰٓ
- to
- வரை
- ardhali l-ʿumuri
- أَرْذَلِ ٱلْعُمُرِ
- the most abject age
- தள்ளாத வயது
- likaylā yaʿlama
- لِكَيْلَا يَعْلَمَ
- so that not he knows
- முடிவில் அறியாமல் ஆகிவிடுகிறார்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- after after
- பின்னர்
- ʿil'min
- عِلْمٍ
- having known
- அறிந்து இருப்பது
- shayan
- شَيْـًٔاۚ
- anything
- எதையும்
- watarā
- وَتَرَى
- And you see
- பார்க்கிறீர்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- hāmidatan
- هَامِدَةً
- barren
- அழிந்து போனதாக
- fa-idhā anzalnā
- فَإِذَآ أَنزَلْنَا
- then when We send down
- நாம் இறக்கினால்
- ʿalayhā
- عَلَيْهَا
- on it
- அதன் மீது
- l-māa
- ٱلْمَآءَ
- water
- மழைநீரை
- ih'tazzat
- ٱهْتَزَّتْ
- it gets stirred
- அது அசைகிறது
- warabat
- وَرَبَتْ
- and it swells
- இன்னும் அதிகப்படுத்துகிறது
- wa-anbatat
- وَأَنۢبَتَتْ
- and grows
- இன்னும் முளைக்க வைக்கிறது
- min kulli
- مِن كُلِّ
- of every
- எல்லா விதமான
- zawjin bahījin
- زَوْجٍۭ بَهِيجٍ
- kind beautiful
- அழகிய தாவரங்களை
Transliteration:
Yaaa ayyuhan naasu in kuntum fee raibim minal ba'si fa innaa khalaqnaakum min turaabin summa min nutfatin summaa min 'alaqatin summa mim mud ghatim mukhal laqatinw wa ghairi mukhalla qatil linubaiyina lakum; wa nuqirru fil arhaami maa nashaaa'u ilaaa ajalim musam man summa nukhrijukum tiflan summa litablughooo ashud dakum wa minkum mai yutawaffa wa minkum mai yuraddu ilaaa arzalil 'umuri likailaa ya'lama mim ba'di 'ilmin shai'aa; wa taral arda haamidatan fa izaaa anzalnaa 'alaihal maaa'ah tazzat wa rabat wa ambatat min kulli zawjim baheej(QS. al-Ḥajj:5)
English Sahih International:
O people, if you should be in doubt about the Resurrection, then [consider that] indeed, We created you from dust, then from a sperm-drop, then from a clinging clot, and then from a lump of flesh, formed and unformed – that We may show you. And We settle in the wombs whom We will for a specified term, then We bring you out as a child, and then [We develop you] that you may reach your [time of] maturity. And among you is he who is taken in [early] death, and among you is he who is returned to the most decrepit [old] age so that he knows, after [once having] knowledge, nothing. And you see the earth barren, but when We send down upon it rain, it quivers and swells and grows [something] of every beautiful kind. (QS. Al-Hajj, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫)
Jan Trust Foundation
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்)| மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்களே! நீங்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதில் சந்தேகத்தில் இருந்தால்... நிச்சயமாக நாம்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர் முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட, முழுமையான உருவம் கொடுக்கப்படாத சதைத் துண்டிலிருந்தும் (படைத்தோம்). (இவ்வாறு முழுமையான உருவம் பெற்றதாகவும் உருவம் பெறாததாகவும் சதைத் துண்டை நாம் ஆக்குவது ஏனெனில் நமது ஆற்றலை) உங்களுக்கு விவரிப்பதற்காக ஆகும். (முழு குழந்தையாக பிறக்கவேண்டும் என்று) நாம் நாடியதை கர்ப்பப் பைகளில் குறிப்பிட்ட (முழு) தவணை வரை தங்க வைக்கிறோம். பிறகு உங்களை குழந்தைகளாக உங்களை வெளியாக்குகிறோம். பிறகு, நீங்கள் உங்களது (முழு அறிவையும்) வலிமையை(யும்) அடைவதற்காக (உங்களை வெளியாக்குகிறோம். உங்களில் (வாலிபத்தை அடைவதற்கு முன்னரே) உயிர் கைப்பற்றப்படுகின்றவரும் உண்டு. இன்னும் உங்களில் தள்ளாத வயது வரை (வாழ்வு அளிக்கப்பட்டு, பின்னர் குழந்தையாக இருந்ததைப் போன்ற பலவீனமான நிலைக்கு) திருப்பப்படுகின்றவரும் உண்டு. முடிவில் (பலவற்றை) அறிந்து இருந்ததற்குப் பின்னர் எதையும் அறியாமல் ஆகிவிடுகிறார். பூமியை அழிந்து போனதாக (-காய்ந்து போனதாக) பார்க்கிறீர். அதன்மீது நாம் மழைநீரை இறக்கினால் அது (உயிர்ப்பெற்று தாவரங்களால்) அசைகிறது. (அழகுறுகிறது.) இன்னும் (அதிக மழை பொழிவதைக் கொண்டு புற்பூண்டுகளையும் விளைச்சல்களையும்) அதிகப்படுத்துகிறது. இன்னும் எல்லா விதமான அழகிய தாவரங்களை முளைக்க வைக்கிறது.