Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௬

Qur'an Surah Al-Hajj Verse 46

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَآ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَاۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَى الْقُلُوْبُ الَّتِيْ فِى الصُّدُوْرِ (الحج : ٢٢)

afalam yasīrū
أَفَلَمْ يَسِيرُوا۟
So have not they traveled
அவர்கள் பயணம் செய்ய வேண்டாமா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
fatakūna
فَتَكُونَ
and is
உண்டாகும்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
qulūbun
قُلُوبٌ
hearts
உள்ளங்களும்
yaʿqilūna
يَعْقِلُونَ
(to) reason
சிந்தித்து புரிகின்றனர்
bihā
بِهَآ
with it
அவற்றின் மூலம்
aw
أَوْ
or
அல்லது
ādhānun
ءَاذَانٌ
ears
காதுகளும்
yasmaʿūna
يَسْمَعُونَ
(to) hear
செவிமடுக்கின்ற
bihā
بِهَاۖ
with it?
அவற்றின் மூலம்
fa-innahā
فَإِنَّهَا
For indeed [it]
ஏனெனில் நிச்சயமாக
lā taʿmā
لَا تَعْمَى
not (are) blinded
குருடாகுவதில்லை
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
the eyes
பார்வைகள்
walākin
وَلَٰكِن
but
எனினும்
taʿmā
تَعْمَى
(are) blinded
குருடாகி விடுகின்றன
l-qulūbu
ٱلْقُلُوبُ
the hearts
உள்ளங்கள்தான்
allatī fī l-ṣudūri
ٱلَّتِى فِى ٱلصُّدُورِ
which (are) in the breasts
நெஞ்சங்களில் உள்ள

Transliteration:

Afalam yaseeroo fil ardi fatakoona lahum quloobuny ya'qiloona bihaaa aw aazaanuny yasm'oona bihaa fa innahaa laa ta'mal absaaru wa laakin ta'mal quloobul latee fissudoor (QS. al-Ḥajj:46)

English Sahih International:

So have they not traveled through the earth and have hearts by which to reason and ears by which to hear? For indeed, it is not eyes that are blinded, but blinded are the hearts which are within the breasts. (QS. Al-Hajj, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவைகளைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக் கூடிய செவி அவர்களுக்கு உண்டாகி விடும். நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக்) கண்கள்தாம் குருடாகி விட்டன. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௬)

Jan Trust Foundation

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? (அழிக்கப்பட்டவர்களின் ஊர்களை அவர்கள் சென்று பார்க்க வேண்டாமா? அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அவற்றின் மூலம் அவர்கள் சிந்தித்துப் புரிகின்ற உள்ளங்களும் அவற்றின் மூலம் செவிமடுக்கின்ற காதுகளும் அவர்களுக்கு உண்டாகும். ஏனெனில் நிச்சயமாக (கண்) பார்வைகள் குருடாகுவதில்லை. எனினும் நெஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான் குருடாகி விடுகின்றன.