Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௫

Qur'an Surah Al-Hajj Verse 45

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَاۖ وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِيْدٍ (الحج : ٢٢)

faka-ayyin
فَكَأَيِّن
And how many
எத்தனையோ
min qaryatin
مِّن قَرْيَةٍ
of a township
ஊர்களை
ahlaknāhā
أَهْلَكْنَٰهَا
We have destroyed it
நாம் அவற்றை அழித்தோம்
wahiya
وَهِىَ
while it
அவை
ẓālimatun
ظَالِمَةٌ
was doing wrong
அநியாயம் புரிபவையாக இருக்க
fahiya
فَهِىَ
so it
அவை
khāwiyatun
خَاوِيَةٌ
fell
வீழ்ந்துள்ளன
ʿalā
عَلَىٰ
on
மீது
ʿurūshihā
عُرُوشِهَا
its roofs
தமது முகடுகள்
wabi'rin
وَبِئْرٍ
and well
கிணறுகள்
muʿaṭṭalatin
مُّعَطَّلَةٍ
abandoned
விடப்பட்ட
waqaṣrin
وَقَصْرٍ
and castle
மாளிகைகளை
mashīdin
مَّشِيدٍ
lofty
சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட

Transliteration:

Faka ayyim min qaryatin ahlaknaahaa wa hiya zaalimatun fahiya khaawiyatun 'alaa 'urooshihaa wa bi'rim mu'at talatinw wa qasrim masheed (QS. al-Ḥajj:45)

English Sahih International:

And how many a city did We destroy while it was committing wrong – so it is [now] fallen into ruin – and [how many] an abandoned well and [how many] a lofty palace. (QS. Al-Hajj, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

அநியாயக்காரர்கள் வசித்திருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. அவற்றின் (எத்தனையோ) கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் மாட மாளிகைகள் (மக்கள் வசிக்காது) பாழாய் கிடக்கின்றன. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௫)

Jan Trust Foundation

அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எத்தனையோ ஊர்களை அவை அநியாயம் புரிபவையாக இருக்க அவற்றை நாம் அழித்தோம். அவை தமது முகடுகள் மீது வீழ்ந்துள்ளன. இன்னும் (பராமரிப்பு இல்லாமல்) விடப்பட்ட எத்தனையோ கிணறுகளையும், சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட (உயரமான, நீளமான) மாளிகைகளையும் அழித்தொழித்தோம்.