Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௪

Qur'an Surah Al-Hajj Verse 44

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَصْحٰبُ مَدْيَنَۚ وَكُذِّبَ مُوْسٰى فَاَمْلَيْتُ لِلْكٰفِرِيْنَ ثُمَّ اَخَذْتُهُمْۚ فَكَيْفَ كَانَ نَكِيْرِ (الحج : ٢٢)

wa-aṣḥābu
وَأَصْحَٰبُ
And the inhabitants
வாசிகளும்
madyana
مَدْيَنَۖ
(of) Madyan
மத்யன்
wakudhiba
وَكُذِّبَ
And Musa was denied
பொய்ப்பிக்கப்பட்டார்
mūsā
مُوسَىٰ
And Musa was denied
மூஸாவும்
fa-amlaytu
فَأَمْلَيْتُ
so I granted respite
நான் அவகாசம் அளித்தேன்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
to the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு
thumma
ثُمَّ
then
பிறகு
akhadhtuhum
أَخَذْتُهُمْۖ
I seized them
நான் அவர்களைப் பிடித்தேன்
fakayfa
فَكَيْفَ
and how
ஆகவே, எப்படி?
kāna
كَانَ
was
இருந்தது
nakīri
نَكِيرِ
My punishment
எனது மறுப்பு

Transliteration:

Wa as haabu Madyana wa kuzziba Moosaa fa amlaitu lilkaafireena summa akhaztuhum fakaifa kaana nakeer (QS. al-Ḥajj:44)

English Sahih International:

And the inhabitants of Madyan. And Moses was denied, so I prolonged enjoyment for the disbelievers; then I seized them, and how [terrible] was My reproach. (QS. Al-Hajj, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர். இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்யாக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நாம் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (நம்முடைய) வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனித்தீர்களா?) (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௪)

Jan Trust Foundation

(இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது சமுதாயமும் சமூது சமுதாயமும், இப்றாஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை) பொய்ப்பித்தனர். மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலம் கழித்த) பிறகு நான் அவர்களைப் பிடித்தேன். (-தண்டனையை இறக்கினேன்.) ஆகவே, எனது மறுப்பு (-எனது தண்டனை) எப்படி இருந்தது?