குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௨
Qur'an Surah Al-Hajj Verse 42
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۙ (الحج : ٢٢)
- wa-in yukadhibūka
- وَإِن يُكَذِّبُوكَ
- And if they deny you
- உம்மை இவர்கள் பொய்ப்பித்தால்
- faqad
- فَقَدْ
- so verily
- திட்டமாக
- kadhabat
- كَذَّبَتْ
- denied
- பொய்ப்பித்தனர்
- qablahum
- قَبْلَهُمْ
- before them
- இவர்களுக்கு முன்னர்
- qawmu
- قَوْمُ
- (the) people
- மக்களும்
- nūḥin
- نُوحٍ
- (of) Nuh
- நூஹூடைய
- waʿādun
- وَعَادٌ
- and Aad
- இன்னும் ஆது
- wathamūdu
- وَثَمُودُ
- and Thamud
- ஸமூது சமுதாயமும்
Transliteration:
Wa iny yukazzibooka faqad kazzabat qablahum qawmu Nooinw wa Aadunw wa Samood(QS. al-Ḥajj:42)
English Sahih International:
And if they deny you, [O Muhammad] – so, before them, did the people of Noah and Aad and Thamud deny [their prophets], (QS. Al-Hajj, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
(நபியே! நிராகரிக்கும்) இவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய மக்களும், ஆது, ஸமூது என்னும் மக்களும் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாக பொய்யாக்கியே இருந்தனர். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௨)
Jan Trust Foundation
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது சமுதாயமும் சமூது சமுதாயமும், இப்றாஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை) பொய்ப்பித்தனர். மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலம் கழித்த) பிறகு நான் அவர்களைப் பிடித்தேன். (-தண்டனையை இறக்கினேன்.) ஆகவே, எனது மறுப்பு (-எனது தண்டனை) எப்படி இருந்தது?