Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௧

Qur'an Surah Al-Hajj Verse 41

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِۗ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ (الحج : ٢٢)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
in makkannāhum
إِن مَّكَّنَّٰهُمْ
if We establish them
அவர்களுக்கு நாம் இடமளித்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
aqāmū
أَقَامُوا۟
they establish
நிறைவேற்றுவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
and they give
இன்னும் கொடுப்பார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
ஸகாத்தை
wa-amarū
وَأَمَرُوا۟
and they enjoin
இன்னும் ஏவுவார்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
the right
நன்மையை
wanahaw
وَنَهَوْا۟
and forbid
இன்னும் தடுப்பார்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِۗ
from the wrong
தீமையிலிருந்து
walillahi
وَلِلَّهِ
And for Allah
அல்லாஹ்வின் பக்கமே
ʿāqibatu
عَٰقِبَةُ
(is the) end
முடிவு
l-umūri
ٱلْأُمُورِ
(of) the matters
எல்லாக் காரியங்களின்

Transliteration:

Allazeena im makkan naahum fil ardi aqaamus Salaata wa aatawuz Zakaata wa amaroo bilma'roofi wa nahaw 'anil munkar; wa lillaahi 'aaqibatul umoor (QS. al-Ḥajj:41)

English Sahih International:

[And they are] those who, if We give them authority in the land, establish prayer and give Zakah and enjoin what is right and forbid what is wrong. And to Allah belongs the outcome of [all] matters. (QS. Al-Hajj, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

இவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவைகளை ஏவி, பாவமானவைகளைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௧)

Jan Trust Foundation

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற) அவர்களுக்கு பூமியில் நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; (தங்களது செல்வங்களுக்கு உரிய) ஸகாத்தைக் கொடுப்பார்கள்; நன்மையை (தவ்ஹீதை) ஏவுவார்கள்; தீமையிலிருந்து (ஷிர்க்கிலிருந்து) தடுப்பார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்வின் பக்கமே!