குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௯
Qur'an Surah Al-Hajj Verse 39
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُذِنَ لِلَّذِيْنَ يُقَاتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْاۗ وَاِنَّ اللّٰهَ عَلٰى نَصْرِهِمْ لَقَدِيْرٌ ۙ (الحج : ٢٢)
- udhina
- أُذِنَ
- Permission is given
- அனுமதிக்கப்பட்டுள்ளது
- lilladhīna yuqātalūna
- لِلَّذِينَ يُقَٰتَلُونَ
- to those who are being fought
- சண்டையிடப்படக் கூடியவர்களுக்கு
- bi-annahum
- بِأَنَّهُمْ
- because they
- நிச்சயமாக அவர்கள்
- ẓulimū
- ظُلِمُوا۟ۚ
- were wronged
- அநீதியிழைக்கப்பட்டார்கள்
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ʿalā naṣrihim
- عَلَىٰ نَصْرِهِمْ
- for their victory
- அவர்களுக்கு உதவி செய்ய
- laqadīrun
- لَقَدِيرٌ
- (is) surely Able
- பேராற்றலுடையவன்
Transliteration:
Uzina lillazeena yuqaataloona bi annahum zulimoo; wa innal laaha 'alaa nasrihim la Qaderr(QS. al-Ḥajj:39)
English Sahih International:
Permission [to fight] has been given to those who are being fought, because they were wronged. And indeed, Allah is competent to give them victory. (QS. Al-Hajj, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௯)
Jan Trust Foundation
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சண்டையிடப்படக் கூடியவர்களுக்கு நிச்சயமாக அவர்கள் அநீதியிழைக்கப்பட்டார்கள் என்பதற்காக (எதிர்த்து போர்புரிய) அனுமதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன்.