Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௬

Qur'an Surah Al-Hajj Verse 36

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَاۤىِٕرِ اللّٰهِ لَكُمْ فِيْهَا خَيْرٌۖ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَاۤفَّۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّۗ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (الحج : ٢٢)

wal-bud'na
وَٱلْبُدْنَ
And the camels and cattle -
இன்னும் கொழுத்த ஒட்டகங்கள்
jaʿalnāhā
جَعَلْنَٰهَا
We have made them
அவற்றை நாம் ஆக்கி இருக்கின்றோம்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min shaʿāiri
مِّن شَعَٰٓئِرِ
among (the) Symbols
அடையாள சின்னங்களில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
fīhā
فِيهَا
therein
அவற்றில்
khayrun
خَيْرٌۖ
(is) good
நன்மைகள் உண்டு
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
So mention
ஆகவே கூறுங்கள்
is'ma
ٱسْمَ
(the) name
பெயரை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalayhā
عَلَيْهَا
over them
அவற்றின் மீது
ṣawāffa
صَوَآفَّۖ
(when) lined up;
நின்றவையாக இருக்க
fa-idhā wajabat
فَإِذَا وَجَبَتْ
and when are down
சாய்ந்து விட்டால்
junūbuhā
جُنُوبُهَا
their sides
அவற்றின் விலாக்கள்
fakulū
فَكُلُوا۟
then eat
சாப்பிடுங்கள்
min'hā
مِنْهَا
from them
அவற்றிலிருந்து
wa-aṭʿimū
وَأَطْعِمُوا۟
and feed
இன்னும் உணவளியுங்கள்
l-qāniʿa
ٱلْقَانِعَ
the needy who do not ask
யாசிப்பவருக்கும்
wal-muʿ'tara
وَٱلْمُعْتَرَّۚ
and the needy who ask
எதிர்பார்த்து வருபவருக்கும்
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறே
sakharnāhā
سَخَّرْنَٰهَا
We have subjected them
அதை வசப்படுத்தித் தந்தோம்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
so that you may be grateful
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Transliteration:

Walbudna ja'alnaahaa lakum min sha'aaa'iril laahi lakum feehaa khairun fazkurusmal laahi 'alaihaa sawaaff; fa izaa wajabat junoobuhaa fakuloo minhaa wa at'imul qaani'a walmu'tarr; kazaalika sakhkharnaahaa lakum la'allakum tashkuroon (QS. al-Ḥajj:36)

English Sahih International:

And the camels and cattle We have appointed for you as among the symbols [i.e., rites] of Allah; for you therein is good. So mention the name of Allah upon them when lined up [for sacrifice]; and when they are [lifeless] on their sides, then eat from them and feed the needy [who does not seek aid] and the beggar. Thus have We subjected them to you that you may be grateful. (QS. Al-Hajj, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத்தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்திவைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௬)

Jan Trust Foundation

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கொழுத்த ஒட்டகங்கள் (மற்றும் மாடுகள்) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கின்றோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒருகால் கட்டுப்பட்டு மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். (அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள், இன்னும் யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அதை உங்களுக்கு வசப்படுத்தித்தந்தோம்.