குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௫
Qur'an Surah Al-Hajj Verse 35
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصَّابِرِيْنَ عَلٰى مَآ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ (الحج : ٢٢)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those
- எவர்கள்
- idhā dhukira
- إِذَا ذُكِرَ
- when is mentioned
- நினைவுகூரப்பட்டால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah -
- அல்லாஹ்
- wajilat
- وَجِلَتْ
- fear
- பயப்படும்
- qulūbuhum
- قُلُوبُهُمْ
- their hearts
- அவர்களது உள்ளங்கள்
- wal-ṣābirīna
- وَٱلصَّٰبِرِينَ
- and those who are patient
- இன்னும் பொறுமையாக இருப்பார்கள்
- ʿalā
- عَلَىٰ
- over
- மீது
- mā aṣābahum
- مَآ أَصَابَهُمْ
- whatever has afflicted them
- அவர்களுக்கு ஏற்பட்டவற்றின்
- wal-muqīmī
- وَٱلْمُقِيمِى
- and those who establish
- இன்னும் நிலைநிறுத்துவார்கள்
- l-ṣalati
- ٱلصَّلَوٰةِ
- the prayer
- தொழுகையை
- wamimmā razaqnāhum
- وَمِمَّا رَزَقْنَٰهُمْ
- and out of what We have provided them
- இன்னும் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
- yunfiqūna
- يُنفِقُونَ
- they spend
- தர்மம் செய்வார்கள்
Transliteration:
Allazeena izaa zukiral laahu wajilat quloobuhum wassaabireena 'alaa maaa asaabahum walmuqeemis Salaati wa mimmaa razaqnaahum yunfiqoon(QS. al-Ḥajj:35)
English Sahih International:
Who, when Allah is mentioned, their hearts are fearful, and [to] the patient over what has afflicted them, and the establishers of prayer and those who spend from what We have provided them. (QS. Al-Hajj, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் தானமும் செய்வார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௫)
Jan Trust Foundation
அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயப்படும். அவர்களுக்கு ஏற்பட்டவற்றின் மீது (-சோதனைகளின் மீது) பொறுமையாக இருப்பார்கள். தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.