Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௨

Qur'an Surah Al-Hajj Verse 32

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَاۤىِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ (الحج : ٢٢)

dhālika
ذَٰلِكَ
That
அவைதான்
waman
وَمَن
and whoever
இன்னும் எவர்
yuʿaẓẓim
يُعَظِّمْ
honors
கண்ணியப் படுத்துவாரோ
shaʿāira
شَعَٰٓئِرَ
(the) Symbols
அடையாளங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-innahā
فَإِنَّهَا
then indeed it
நிச்சயமாக அது
min taqwā
مِن تَقْوَى
(is) from (the) piety
இறையச்சத்திலிருந்து
l-qulūbi
ٱلْقُلُوبِ
(of) the hearts
உள்ளங்களின்

Transliteration:

Zaalika wa mai yu'azzim sha'aaa'iral laahi fa innahaa min taqwal quloob (QS. al-Ḥajj:32)

English Sahih International:

That [is so]. And whoever honors the symbols [i.e., rites] of Allah – indeed, it is from the piety of hearts. (QS. Al-Hajj, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௨)

Jan Trust Foundation

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவைதான் (சிலைகளை விட்டும் பொய் பேச்சை விட்டும் விலகுவது, அல்லாஹ்விற்கு பணிவது, இணைவைப்பதிலிருந்து விலகி இருப்பது உள்ளத்தின் இறையச்சத்தைச் சேர்ந்ததாகும்). இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ (-குர்பானி பிராணிகளை அழகிய முறையில் பராமரித்து அவற்றை கொழுக்க வைப்பாரோ, ஹஜ்ஜுடைய கடமைகளை அல்லாஹ் ஏவிய முறையில் செய்வாரோ) நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து உள்ளவையாகும்.