Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௯

Qur'an Surah Al-Hajj Verse 29

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لْيَقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ (الحج : ٢٢)

thumma
ثُمَّ
Then
பிறகு
l'yaqḍū
لْيَقْضُوا۟
let them complete
இன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும்
tafathahum
تَفَثَهُمْ
their prescribed duties
தங்களது அழுக்குகளை
walyūfū
وَلْيُوفُوا۟
and fulfil
இன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்
nudhūrahum
نُذُورَهُمْ
their vows
நேர்ச்சைகளை தங்களது
walyaṭṭawwafū
وَلْيَطَّوَّفُوا۟
and circumambulate
இன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்
bil-bayti
بِٱلْبَيْتِ
the House
வீட்டை
l-ʿatīqi
ٱلْعَتِيقِ
[the] Ancient"
மிகப் பழமையான

Transliteration:

Summal yaqdoo tafasahum wal yoofoo nuzoorahum wal yattawwafoo bil Baitil 'Ateeq (QS. al-Ḥajj:29)

English Sahih International:

Then let them end their untidiness and fulfill their vows and perform ‹Tawaf around the ancient House." (QS. Al-Hajj, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்களுடைய நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௨௯)

Jan Trust Foundation

பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவர்கள் தங்களது அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். மிகப் பழமையான வீட்டை அவர்கள் தவாஃப் (சுற்றி அல்லாஹ்வை வழிபாடு) செய்யட்டும்.