Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௪

Qur'an Surah Al-Hajj Verse 24

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُدُوْٓا اِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِۚ وَهُدُوْٓا اِلٰى صِرَاطِ الْحَمِيْدِ (الحج : ٢٢)

wahudū
وَهُدُوٓا۟
And they were guided
இன்னும் வழிகாட்டப்பட்டார்கள்
ilā l-ṭayibi
إِلَى ٱلطَّيِّبِ
to the good
நல்லதற்கு
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
of the speech
பேச்சுகளில்
wahudū
وَهُدُوٓا۟
and they were guided
இன்னும் வழிகாட்டப்பட்டார்கள்
ilā ṣirāṭi
إِلَىٰ صِرَٰطِ
to (the) path
பாதைக்கு
l-ḥamīdi
ٱلْحَمِيدِ
(of) the Praiseworthy
புகழுக்குரியவனின்

Transliteration:

Wa hudooo ilat taiyibi minal qawli wa hudooo ilaaa siraatil hameed (QS. al-Ḥajj:24)

English Sahih International:

And they had been guided [in worldly life] to good speech, and they were guided to the path of the Praiseworthy. (QS. Al-Hajj, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (இவ்வுலகில்) பேச்சுகளில் நல்லதற்கு வழிகாட்டப்பட்டார்கள். இன்னும் புகழுக்குரியவனின் பாதைக்கு (-மார்க்கத்திற்கு) வழிகாட்டப்பட்டார்கள்.