Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௩

Qur'an Surah Al-Hajj Verse 23

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًاۗ وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ (الحج : ٢٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yud'khilu
يُدْخِلُ
will admit
நுழைப்பான்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
the righteous deeds
நன்மைகள்
jannātin
جَنَّٰتٍ
(to) Gardens
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
flow
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath it
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
yuḥallawna
يُحَلَّوْنَ
They will be adorned
அணிவிக்கப் படுவார்கள்
fīhā
فِيهَا
therein
அவற்றில்
min asāwira
مِنْ أَسَاوِرَ
with bracelets
வளையல்களும்
min dhahabin
مِن ذَهَبٍ
of gold
தங்கத்தினாலான
walu'lu-an
وَلُؤْلُؤًاۖ
and pearl
இன்னும் முத்து
walibāsuhum
وَلِبَاسُهُمْ
and their garments
இன்னும் அவர்களது ஆடை
fīhā
فِيهَا
therein
அவற்றில்
ḥarīrun
حَرِيرٌ
(will be of) silk
பட்டாகும்

Transliteration:

Innal laaha yudkhilul lazeena aamanoo wa 'amilus saalihaati jannaatin tajree min tahtihal anhaaru yuhallawna feehaa min asaawira min zahabinw wa lu'lu'aa; wa libaasuhum feehaa hareer (QS. al-Ḥajj:23)

English Sahih International:

Indeed, Allah will admit those who believe and do righteous deeds to gardens beneath which rivers flow. They will be adorned therein with bracelets of gold and pearl, and their garments therein will be silk. (QS. Al-Hajj, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௨௩)

Jan Trust Foundation

ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் (மரங்களுக்கு) கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (-அந்த சொர்க்கங்களில்) தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவற்றில் அவர்களது ஆடை பட்டாகும்.