குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௧௫
Qur'an Surah Al-Hajj Verse 15
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ كَانَ يَظُنُّ اَنْ لَّنْ يَّنْصُرَهُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ اِلَى السَّمَاۤءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهٗ مَا يَغِيْظُ (الحج : ٢٢)
- man
- مَن
- Whoever
- யார்
- kāna
- كَانَ
- [is]
- இருக்கின்றானோ
- yaẓunnu
- يَظُنُّ
- thinks
- எண்ணுகிறான்
- an lan yanṣurahu
- أَن لَّن يَنصُرَهُ
- that not Allah will help him
- அவருக்கு உதவவே மாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will help him
- அல்லாஹ்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இவ்வுலகிலும்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- and the Hereafter
- மறு உலகிலும்
- falyamdud
- فَلْيَمْدُدْ
- then let him extend
- தொங்கவிடட்டும்
- bisababin
- بِسَبَبٍ
- a rope
- ஒரு கயிறை
- ilā l-samāi
- إِلَى ٱلسَّمَآءِ
- to the sky
- முகட்டில்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- l'yaqṭaʿ
- لْيَقْطَعْ
- let him cut off
- துண்டித்துக் கொள்ளவும்
- falyanẓur
- فَلْيَنظُرْ
- then let him see
- அவன் பார்க்கட்டும்
- hal yudh'hibanna
- هَلْ يُذْهِبَنَّ
- whether will remove
- நிச்சயமாகபோக்கி விடுகிறதா
- kayduhu
- كَيْدُهُۥ
- his plan
- அவனுடைய சூழ்ச்சி
- mā yaghīẓu
- مَا يَغِيظُ
- what enrages
- அவனுக்கு கோபமூட்டுவதை
Transliteration:
Man kaana yazunnu allai yansurahul laahu fid dunyaa wal aakhirati fal yamdud bisababin ilas samaaa'i summal yaqta' falyanzur hal yuzhibanna kaiduhoo maa yagheez(QS. al-Ḥajj:15)
English Sahih International:
Whoever should think that Allah will not support him [i.e., Prophet Muhammad (^)] in this world and the Hereafter – let him extend a rope to the ceiling, then cut off [his breath], and let him see: will his effort remove that which enrages [him]? (QS. Al-Hajj, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
எவன் (நம்முடைய தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன்னுடைய பொறாமையின் காரணமாக) எண்ணுகின்றானோ அவன் வீட்டி(ன் முகட்டி)ல் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன்னுடைய சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௧௫)
Jan Trust Foundation
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் அல்லாஹ் அவருக்கு (-தனது நபிக்கு) இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவவே மாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிறை தொங்கவிட்டு பிறகு (அதை) துண்டித்துக் கொள்ளவும் (-தூக்கு போட்டுக் கொள்ளவும்) அவனுடைய சூழ்ச்சி (-தூக்கு போட்டுக் கொள்வது) அவனுக்கு கோபமூட்டுவதை நிச்சயமாக போக்கி விடுகிறதா என்று அவன் பார்க்கட்டும்.