Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௧௩

Qur'an Surah Al-Hajj Verse 13

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَدْعُوْا لَمَنْ ضَرُّهٗٓ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖۗ لَبِئْسَ الْمَوْلٰى وَلَبِئْسَ الْعَشِيْرُ (الحج : ٢٢)

yadʿū
يَدْعُوا۟
He calls
அவர் அழைக்கிறார்
laman
لَمَن
(one) who -
எவரை
ḍarruhu
ضَرُّهُۥٓ
his harm
அவருடைய தீமை
aqrabu
أَقْرَبُ
(is) closer
மிக சமீபமாக இருக்கிறது
min nafʿihi
مِن نَّفْعِهِۦۚ
than his benefit
அவருடைய நன்மையைவிட
labi'sa l-mawlā
لَبِئْسَ ٱلْمَوْلَىٰ
Surely an evil protector
இவன் கெட்ட பங்காளியாவான்
walabi'sa l-ʿashīru
وَلَبِئْسَ ٱلْعَشِيرُ
and surely an evil friend!
அவன்கெட்டதோழன்

Transliteration:

Yad'oo laman darruhooo aqrabu min naf'ih; labi'salmawlaa wa labi'sal 'asheer (QS. al-Ḥajj:13)

English Sahih International:

He invokes one whose harm is closer than his benefit – how wretched the protector and how wretched the associate. (QS. Al-Hajj, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

நன்மை ஏற்படுவதை விட தீங்கு ஏற்படுவது எவர்களால் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களை இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௧௩)

Jan Trust Foundation

எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-இஸ்லாமை விட்டு வெளியேறியவர்) யாருடைய நன்மையைவிட அவருடைய தீமைதான் மிக சமீபமாக இருக்கிறதோ அவரைத்தான் அழைக்கிறார் (-வணங்குகிறார்). இவன் கெட்ட பங்காளியாவான் அவன் கெட்ட தோழன் ஆவான்.