குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௧௨
Qur'an Surah Al-Hajj Verse 12
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهٗ وَمَا لَا يَنْفَعُهٗۗ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ ۚ (الحج : ٢٢)
- yadʿū
- يَدْعُوا۟
- He calls
- வணங்குகிறார்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- besides besides Allah
- அல்லாஹ்வையன்றி
- mā lā yaḍurruhu
- مَا لَا يَضُرُّهُۥ
- what not harms him
- தனக்கு தீங்கிழைக்காததை
- wamā lā yanfaʿuhu
- وَمَا لَا يَنفَعُهُۥۚ
- and what not benefits him
- இன்னும் தனக்கு நன்மை செய்யாததை
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- That [it]
- இதுதான்
- l-ḍalālu
- ٱلضَّلَٰلُ
- (is) the straying
- வழிகேடாகும்
- l-baʿīdu
- ٱلْبَعِيدُ
- far away
- மிக தூரமான
Transliteration:
Yad'oo min doonil laahi maa laa yadurruhoo wa maa laa yanfa'uh' zaalika huwad dalaalul ba'ed(QS. al-Ḥajj:12)
English Sahih International:
He invokes instead of Allah that which neither harms him nor benefits him. That is what is the extreme error. (QS. Al-Hajj, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
இவர்கள் தங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவைகளை (உதவிக்கு) அழைக்கின்றனர். இது வெகுதூரமான(தொரு) வழிகேடாகும். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௧௨)
Jan Trust Foundation
அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (-சந்தேகத்தோடு அல்லாஹ்வை வணங்குபவர் இஸ்லாமை விட்டு வெளியேறி,) தனக்கு தீங்கிழைக்காததை, தனக்கு நன்மை செய்யாததை அல்லாஹ்வை அன்றி வணங்குகிறார். இதுதான் மிக தூரமான வழிகேடாகும்.