Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௧௧

Qur'an Surah Al-Hajj Verse 11

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرُ ِۨاطْمَـَٔنَّ بِهٖۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ ِۨانْقَلَبَ عَلٰى وَجْهِهٖۗ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَۗ ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ (الحج : ٢٢)

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
And among the mankind
மக்களில் இருக்கின்றார்
man yaʿbudu
مَن يَعْبُدُ
(is he) who worships
எவர்/வணங்குவார்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ʿalā ḥarfin
عَلَىٰ حَرْفٍۖ
on an edge
சந்தேகத்துடன்
fa-in aṣābahu
فَإِنْ أَصَابَهُۥ
And if befalls him
அவருக்கு கிடைத்தால்
khayrun
خَيْرٌ
good
நன்மை
iṭ'ma-anna
ٱطْمَأَنَّ
he is content
திருப்தியடைகிறார்
bihi
بِهِۦۖ
with it
அதைக் கொண்டு
wa-in aṣābathu
وَإِنْ أَصَابَتْهُ
and if befalls him
அவருக்கு ஏற்பட்டால்
fit'natun
فِتْنَةٌ
a trial
சோதனை
inqalaba
ٱنقَلَبَ
he turns
திரும்பி விடுகிறார்
ʿalā
عَلَىٰ
on
மீதே
wajhihi
وَجْهِهِۦ
his face
தனது முகத்தின்
khasira
خَسِرَ
He has lost
அவர் நஷ்டமடைந்து விட்டார்
l-dun'yā
ٱلدُّنْيَا
the world
இவ்வுலகிலும்
wal-ākhirata
وَٱلْءَاخِرَةَۚ
and the Hereafter
மறு உலகிலும்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
That [it]
இதுதான்
l-khus'rānu
ٱلْخُسْرَانُ
(is) the loss
(பெரும்) நஷ்டமாகும்
l-mubīnu
ٱلْمُبِينُ
clear
தெளிவான

Transliteration:

Wa minan naasi mai ya'budul laaha 'alaa harfin fa in asaabahoo khairunit maanna bihee wa in asaabat hu fitnatunin qalaba 'alaa wajhihee khasirad dunyaa wal aakhirah; zaalika huwal khusraanul mubeen (QS. al-Ḥajj:11)

English Sahih International:

And of the people is he who worships Allah on an edge. If he is touched by good, he is reassured by it; but if he is struck by trial, he turns on his face [to unbelief]. He has lost [this] world and the Hereafter. That is what is the manifest loss. (QS. Al-Hajj, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௧௧)

Jan Trust Foundation

இன்னும்| மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சந்தேகத்துடன் அல்லாஹ்வை வணங்குபவரும் மக்களில் இருக்கின்றார். அவருக்கு நன்மை (-செல்வம்) கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தியடைகிறார். அவருக்கு சோதனை (-நெருக்கடி) ஏற்பட்டால் தனது (இறை நிராகரிப்பின்) முகத்தின் மீதே திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரும்) நஷ்டமாகும்.