Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 8

Al-Hajj

(al-Ḥajj)

௭௧

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَيْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ ۗوَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ ٧١

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
அவர்கள் வணங்குகின்றனர்
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
mā lam yunazzil
مَا لَمْ يُنَزِّلْ
எதை/இறக்கவில்லை
bihi
بِهِۦ
அதற்கு
sul'ṭānan
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தையும்
wamā
وَمَا
இன்னும் எதை
laysa
لَيْسَ
இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
bihi
بِهِۦ
அதைப் பற்றி
ʿil'mun
عِلْمٌۗ
அறிவும்
wamā
وَمَا
இல்லை
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
min naṣīrin
مِن نَّصِيرٍ
உதவியாளர் யாரும்
(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) யாதொரு அத்தாட்சியும் அளிக்கவில்லை; அன்றி, அவர்களிடம் கல்வி சம்பந்தமான யாதொரு ஆதாரமும் இல்லை. இத்தகைய அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௧)
Tafseer
௭௨

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ تَعْرِفُ فِيْ وُجُوْهِ الَّذِيْنَ كَفَرُوا الْمُنْكَرَۗ يَكَادُوْنَ يَسْطُوْنَ بِالَّذِيْنَ يَتْلُوْنَ عَلَيْهِمْ اٰيٰتِنَاۗ قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْۗ اَلنَّارُۗ وَعَدَهَا اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْاۗ وَبِئْسَ الْمَصِيْرُ ࣖ ٧٢

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான
taʿrifu
تَعْرِفُ
நீர் பார்ப்பீர்
fī wujūhi
فِى وُجُوهِ
முகங்களில்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுடைய
l-munkara
ٱلْمُنكَرَۖ
விரும்பாததை
yakādūna
يَكَادُونَ
அவர்கள் முயற்சிக்கின்றனர்
yasṭūna
يَسْطُونَ
கடுமையாகப் பிடித்து விடுவதற்கு
bi-alladhīna yatlūna
بِٱلَّذِينَ يَتْلُونَ
ஓதிக் காட்டுபவர்களை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு முன்
āyātinā
ءَايَٰتِنَاۗ
நமது வசனங்களை
qul
قُلْ
நீர் கூறுவீராக
afa-unabbi-ukum
أَفَأُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிக்கவா
bisharrin
بِشَرٍّ
வெறுப்பானதை
min dhālikumu
مِّن ذَٰلِكُمُۗ
இவர்களைவிட
l-nāru
ٱلنَّارُ
நரகம்
waʿadahā
وَعَدَهَا
அதை வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
நிராகரித்தவர்களுக்கு
wabi'sa
وَبِئْسَ
அது மிகக் கெட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்
அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதனை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீங்கள் காண்பீர்கள். நம்முடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நான் உங்களுக்கு இதனைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதனையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவருக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௨)
Tafseer
௭௩

يٰٓاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ۗاِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ۗوَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْـًٔا لَّا يَسْتَنْقِذُوْهُ مِنْهُۗ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ ٧٣

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
ḍuriba
ضُرِبَ
விவரிக்கப்படுகிறது
mathalun
مَثَلٌ
ஓர் உதாரணம்
fa-is'tamiʿū
فَٱسْتَمِعُوا۟
செவிமடுத்து கேளுங்கள்
lahu
لَهُۥٓۚ
அதை
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna tadʿūna
ٱلَّذِينَ تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றவை
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
lan yakhluqū
لَن يَخْلُقُوا۟
அறவே படைக்க மாட்டார்கள்
dhubāban
ذُبَابًا
ஒரு ஈயையும்
walawi ij'tamaʿū lahu
وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥۖ
அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரி/அதற்கு
wa-in yaslub'humu
وَإِن يَسْلُبْهُمُ
அதைப் பறித்தால்/அவர்களிடமிருந்து
l-dhubābu
ٱلذُّبَابُ
shayan
شَيْـًٔا
எதையும்
lā yastanqidhūhu
لَّا يَسْتَنقِذُوهُ
அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்/அதை
min'hu
مِنْهُۚ
அதனிடமிருந்து
ḍaʿufa
ضَعُفَ
பலவீனமானவர்(களே)
l-ṭālibu
ٱلطَّالِبُ
தேடக்கூடியதும்
wal-maṭlūbu
وَٱلْمَطْلُوبُ
தேடப்படுவதும்
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே! ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௩)
Tafseer
௭௪

مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۗ اِنَّ اللّٰهَ لَقَوِيٌّ عَزِيْزٌ ٧٤

mā qadarū
مَا قَدَرُوا۟
கண்ணியப்படுத்தவில்லை
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
தக்கவாறு
qadrihi
قَدْرِهِۦٓۗ
அவனுடைய தகுதிக்கு
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laqawiyyun
لَقَوِىٌّ
மகா வலிமையுடையவன்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௪)
Tafseer
௭௫

اَللّٰهُ يَصْطَفِيْ مِنَ الْمَلٰۤىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ۚ ٧٥

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yaṣṭafī
يَصْطَفِى
தேர்வு செய்கிறான்
mina l-malāikati
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்தும்
rusulan
رُسُلًا
தூதர்களை
wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِۚ
மனிதர்களிலிருந்தும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
samīʿun
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௫)
Tafseer
௭௬

يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ٧٦

yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
mā bayna aydīhim
مَا بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும்
wamā khalfahum
وَمَا خَلْفَهُمْۗ
அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும்
wa-ilā
وَإِلَى
பக்கமே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tur'jaʿu
تُرْجَعُ
திருப்பப்படுகின்றன
l-umūru
ٱلْأُمُورُ
காரியங்கள்
அவர்களுக்கு முன்னர் (சென்று) இருப்பவைகளையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவைகளையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௬)
Tafseer
௭௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۚ۩ ٧٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ir'kaʿū
ٱرْكَعُوا۟
குனியுங்கள்
wa-us'judū
وَٱسْجُدُوا۟
இன்னும் சிரம்பணியுங்கள்
wa-uʿ'budū
وَٱعْبُدُوا۟
இன்னும் வணங்குங்கள்
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
wa-if'ʿalū l-khayra
وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ
செய்யுங்கள்/நன்மை
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ۩
நீங்கள் வெற்றி அடைவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௭)
Tafseer
௭௮

وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖۗ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍۗ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَۗ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِيْنَ ەۙ مِنْ قَبْلُ وَفِيْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَاۤءَ عَلَى النَّاسِۖ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ۗهُوَ مَوْلٰىكُمْۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ ࣖ ۔ ٧٨

wajāhidū
وَجَٰهِدُوا۟
போரிடுங்கள்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் பாதையில்
ḥaqqa
حَقَّ
முழுமையாக
jihādihi
جِهَادِهِۦۚ
போரிடுவதாக
huwa
هُوَ
அவன்தான்
ij'tabākum
ٱجْتَبَىٰكُمْ
உங்களைத் தேர்ந்தெடுத்தான்
wamā jaʿala
وَمَا جَعَلَ
அவன் வைக்கவில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fī l-dīni
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
min ḥarajin
مِنْ حَرَجٍۚ
எவ்வித நெருக்கடியையும்
millata
مِّلَّةَ
மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள்
abīkum
أَبِيكُمْ
உங்கள் தந்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَۚ
இப்றாஹீமுடைய
huwa
هُوَ
அவன்
sammākumu
سَمَّىٰكُمُ
உங்களுக்கு பெயர் வைத்தான்
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்கள்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னரும்
wafī hādhā
وَفِى هَٰذَا
இதிலும்
liyakūna
لِيَكُونَ
இருப்பதற்காகவும்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
shahīdan
شَهِيدًا
சாட்சியாளராக
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
watakūnū
وَتَكُونُوا۟
இன்னும் நீங்கள் இருப்பதற்காக
shuhadāa
شُهَدَآءَ
சாட்சியாளர்களாக
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِۚ
மக்கள் மீது
fa-aqīmū
فَأَقِيمُوا۟
ஆகவே நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-iʿ'taṣimū
وَٱعْتَصِمُوا۟
உறுதியாக நம்புங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
huwa
هُوَ
அவன்தான்
mawlākum
مَوْلَىٰكُمْۖ
உங்கள் பொறுப்பாளன்
faniʿ'ma
فَنِعْمَ
அவன் சிறந்தவன்
l-mawlā
ٱلْمَوْلَىٰ
பொறுப்பாளன் (எஜமானன்)
waniʿ'ma
وَنِعْمَ
அவன் சிறந்தவன்
l-naṣīru
ٱلنَّصِيرُ
உதவியாளன்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௮)
Tafseer