ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ٦١
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-anna
- بِأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yūliju
- يُولِجُ
- நுழைக்கிறான்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- fī l-nahāri
- فِى ٱلنَّهَارِ
- பகலில்
- wayūliju
- وَيُولِجُ
- நுழைக்கிறான்
- l-nahāra fī al-layli
- ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ
- பகலை / இரவில்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌۢ
- நன்கு செவியுறுபவன்
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்ட வனாகவும் ஆக்கிவிடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௧)Tafseer
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ ٦٢
- dhālika bi-anna
- ذَٰلِكَ بِأَنَّ
- அது / நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- அல்லாஹ்தான்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மையானவன்
- wa-anna
- وَأَنَّ
- நிச்சயமாக
- mā yadʿūna
- مَا يَدْعُونَ
- அவர்கள் அழைக்கின்றவை
- min dūnihi
- مِن دُونِهِۦ
- அவனையன்றி
- huwa
- هُوَ
- அது
- l-bāṭilu
- ٱلْبَٰطِلُ
- பொய்யானவையாகும்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- அல்லாஹ்தான்
- l-ʿaliyu
- ٱلْعَلِىُّ
- மிக உயர்ந்தவன்
- l-kabīru
- ٱلْكَبِيرُ
- மகா பெரியவன்
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும் (என்பதும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன் (என்பதும் இதற்குக் காரணமாகும்). ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௨)Tafseer
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۖ فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةًۗ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ ۚ ٦٣
- alam tara
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- anzala
- أَنزَلَ
- இறக்குகின்றான்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- māan
- مَآءً
- மழையை
- fatuṣ'biḥu
- فَتُصْبِحُ
- மாறுகின்றது
- l-arḍu
- ٱلْأَرْضُ
- பூமி
- mukh'ḍarratan
- مُخْضَرَّةًۗ
- பசுமையாக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- laṭīfun
- لَطِيفٌ
- நுட்பமானவன்
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௩)Tafseer
لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ࣖ ٦٤
- lahu
- لَّهُۥ
- அவனுக்கே சொந்தமானவை
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவையும்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۗ
- பூமியில்உள்ளவையும்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-laha lahuwa
- ٱللَّهَ لَهُوَ
- அல்லாஹ்தான்
- l-ghaniyu
- ٱلْغَنِىُّ
- மகா செல்வந்தன்
- l-ḥamīdu
- ٱلْحَمِيدُ
- பெரும் புகழுக்குரியவன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௪)Tafseer
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِى الْاَرْضِ وَالْفُلْكَ تَجْرِيْ فِى الْبَحْرِ بِاَمْرِهٖۗ وَيُمْسِكُ السَّمَاۤءَ اَنْ تَقَعَ عَلَى الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖۗ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ٦٥
- alam tara
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- sakhara
- سَخَّرَ
- வசப்படுத்தியுள்ளான்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mā fī l-arḍi
- مَّا فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவற்றை
- wal-ful'ka
- وَٱلْفُلْكَ
- கப்பலையும்
- tajrī
- تَجْرِى
- செல்கின்றதாக
- fī l-baḥri
- فِى ٱلْبَحْرِ
- கடலில்
- bi-amrihi
- بِأَمْرِهِۦ
- அவனது கட்டளைப்படி
- wayum'siku
- وَيُمْسِكُ
- இன்னும் தடுத்திருக்கின்றான்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- வானத்தை
- an taqaʿa
- أَن تَقَعَ
- வீழ்ந்து விடாமல்
- ʿalā l-arḍi
- عَلَى ٱلْأَرْضِ
- பூமியின் மீது
- illā bi-idh'nihi
- إِلَّا بِإِذْنِهِۦٓۗ
- தவிர/அவனது கட்டளையைக் கொண்டே
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bil-nāsi
- بِٱلنَّاسِ
- மக்கள் மீது
- laraūfun
- لَرَءُوفٌ
- மகா இரக்கமுள்ளவன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கின்றான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன்னுடைய அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௫)Tafseer
وَهُوَ الَّذِيْٓ اَحْيَاكُمْ ۖ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْۗ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ ٦٦
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِىٓ
- அவன்தான்
- aḥyākum
- أَحْيَاكُمْ
- உங்களை உயிர்ப்பித்தான்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yumītukum
- يُمِيتُكُمْ
- உங்களை மரணிக்கச் செய்வான்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuḥ'yīkum
- يُحْيِيكُمْۗ
- உங்களை உயிர்ப்பிப்பான்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதன்
- lakafūrun
- لَكَفُورٌ
- மிக நன்றி கெட்டவன்
அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். அவன்தான் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும், அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவனாக இருக்கிறான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௬)Tafseer
لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا يُنَازِعُنَّكَ فِى الْاَمْرِ وَادْعُ اِلٰى رَبِّكَۗ اِنَّكَ لَعَلٰى هُدًى مُّسْتَقِيْمٍ ٦٧
- likulli
- لِّكُلِّ
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- சமுதாயத்திற்கும்
- jaʿalnā
- جَعَلْنَا
- நாம் ஏற்படுத்தினோம்
- mansakan
- مَنسَكًا
- ஒரு பலியை
- hum
- هُمْ
- அவர்கள்
- nāsikūhu
- نَاسِكُوهُۖ
- அதைபலியிடுவார்கள்
- falā yunāziʿunnaka
- فَلَا يُنَٰزِعُنَّكَ
- ஆகவே அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டாம்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِۚ
- அந்த விஷயத்தில்
- wa-ud'ʿu
- وَٱدْعُ
- அழைப்பீராக
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- rabbika
- رَبِّكَۖ
- உமது இறைவனின்
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீர்
- laʿalā hudan
- لَعَلَىٰ هُدًى
- வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- நேரான
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உங்களுடைய காலத்தில் உங்களுக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உங்களுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். அன்றி, நீங்கள் அவர்களை உங்களுடைய இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழையுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான வழியில்தான் இருக்கின்றீர்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௭)Tafseer
وَاِنْ جَادَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ٦٨
- wa-in jādalūka
- وَإِن جَٰدَلُوكَ
- அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால்
- faquli
- فَقُلِ
- நீர் கூறுவீராக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்கின்றதை
(நபியே!) பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (என்றும்) ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௮)Tafseer
اَللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ ٦٩
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yaḥkumu
- يَحْكُمُ
- தீர்ப்பளிப்பான்
- baynakum
- بَيْنَكُمْ
- உங்கள் மத்தியில்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- fīmā kuntum fīhi takhtalifūna
- فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
- நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில்
நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்" என்றும் கூறுங்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௯)Tafseer
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَاۤءِ وَالْاَرْضِۗ اِنَّ ذٰلِكَ فِيْ كِتٰبٍۗ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ ٧٠
- alam taʿlam
- أَلَمْ تَعْلَمْ
- நீர் அறியவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā fī l-samāi
- مَا فِى ٱلسَّمَآءِ
- வானத்தில் உள்ளவற்றை
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- இன்னும் பூமியில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- fī kitābin
- فِى كِتَٰبٍۚ
- ‘லவ்ஹூல் மஹ்பூலில்’
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- dhālika
- ذَٰلِكَ
- இது
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்விற்கு
- yasīrun
- يَسِيرٌ
- மிக சுலபமானதே
(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் அறியவில்லையா? நிச்சயமாக இவை யாவும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே! ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௦)Tafseer