Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 5

Al-Hajj

(al-Ḥajj)

௪௧

اَلَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِۗ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ٤١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
in makkannāhum
إِن مَّكَّنَّٰهُمْ
அவர்களுக்கு நாம் இடமளித்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
aqāmū
أَقَامُوا۟
நிறைவேற்றுவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
இன்னும் கொடுப்பார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-amarū
وَأَمَرُوا۟
இன்னும் ஏவுவார்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
wanahaw
وَنَهَوْا۟
இன்னும் தடுப்பார்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِۗ
தீமையிலிருந்து
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-umūri
ٱلْأُمُورِ
எல்லாக் காரியங்களின்
இவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவைகளை ஏவி, பாவமானவைகளைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௧)
Tafseer
௪௨

وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۙ ٤٢

wa-in yukadhibūka
وَإِن يُكَذِّبُوكَ
உம்மை இவர்கள் பொய்ப்பித்தால்
faqad
فَقَدْ
திட்டமாக
kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
மக்களும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
waʿādun
وَعَادٌ
இன்னும் ஆது
wathamūdu
وَثَمُودُ
ஸமூது சமுதாயமும்
(நபியே! நிராகரிக்கும்) இவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய மக்களும், ஆது, ஸமூது என்னும் மக்களும் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாக பொய்யாக்கியே இருந்தனர். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௨)
Tafseer
௪௩

وَقَوْمُ اِبْرٰهِيْمَ وَقَوْمُ لُوْطٍ ۙ ٤٣

waqawmu
وَقَوْمُ
மக்களும்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுடைய
waqawmu
وَقَوْمُ
மக்களும்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
(இவ்வாறே) இப்ராஹீமுடைய மக்கள் (இப்ராஹீமையும்), லூத்துடைய மக்கள் (லூத்தையும்) பொய்யாக்கினார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௩)
Tafseer
௪௪

وَّاَصْحٰبُ مَدْيَنَۚ وَكُذِّبَ مُوْسٰى فَاَمْلَيْتُ لِلْكٰفِرِيْنَ ثُمَّ اَخَذْتُهُمْۚ فَكَيْفَ كَانَ نَكِيْرِ ٤٤

wa-aṣḥābu
وَأَصْحَٰبُ
வாசிகளும்
madyana
مَدْيَنَۖ
மத்யன்
wakudhiba
وَكُذِّبَ
பொய்ப்பிக்கப்பட்டார்
mūsā
مُوسَىٰ
மூஸாவும்
fa-amlaytu
فَأَمْلَيْتُ
நான் அவகாசம் அளித்தேன்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
thumma
ثُمَّ
பிறகு
akhadhtuhum
أَخَذْتُهُمْۖ
நான் அவர்களைப் பிடித்தேன்
fakayfa
فَكَيْفَ
ஆகவே, எப்படி?
kāna
كَانَ
இருந்தது
nakīri
نَكِيرِ
எனது மறுப்பு
(அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர். இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்யாக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நாம் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (நம்முடைய) வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனித்தீர்களா?) ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௪)
Tafseer
௪௫

فَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَاۖ وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِيْدٍ ٤٥

faka-ayyin
فَكَأَيِّن
எத்தனையோ
min qaryatin
مِّن قَرْيَةٍ
ஊர்களை
ahlaknāhā
أَهْلَكْنَٰهَا
நாம் அவற்றை அழித்தோம்
wahiya
وَهِىَ
அவை
ẓālimatun
ظَالِمَةٌ
அநியாயம் புரிபவையாக இருக்க
fahiya
فَهِىَ
அவை
khāwiyatun
خَاوِيَةٌ
வீழ்ந்துள்ளன
ʿalā
عَلَىٰ
மீது
ʿurūshihā
عُرُوشِهَا
தமது முகடுகள்
wabi'rin
وَبِئْرٍ
கிணறுகள்
muʿaṭṭalatin
مُّعَطَّلَةٍ
விடப்பட்ட
waqaṣrin
وَقَصْرٍ
மாளிகைகளை
mashīdin
مَّشِيدٍ
சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட
அநியாயக்காரர்கள் வசித்திருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. அவற்றின் (எத்தனையோ) கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் மாட மாளிகைகள் (மக்கள் வசிக்காது) பாழாய் கிடக்கின்றன. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௫)
Tafseer
௪௬

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَآ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَاۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَى الْقُلُوْبُ الَّتِيْ فِى الصُّدُوْرِ ٤٦

afalam yasīrū
أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் பயணம் செய்ய வேண்டாமா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fatakūna
فَتَكُونَ
உண்டாகும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
qulūbun
قُلُوبٌ
உள்ளங்களும்
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்
bihā
بِهَآ
அவற்றின் மூலம்
aw
أَوْ
அல்லது
ādhānun
ءَاذَانٌ
காதுகளும்
yasmaʿūna
يَسْمَعُونَ
செவிமடுக்கின்ற
bihā
بِهَاۖ
அவற்றின் மூலம்
fa-innahā
فَإِنَّهَا
ஏனெனில் நிச்சயமாக
lā taʿmā
لَا تَعْمَى
குருடாகுவதில்லை
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
walākin
وَلَٰكِن
எனினும்
taʿmā
تَعْمَى
குருடாகி விடுகின்றன
l-qulūbu
ٱلْقُلُوبُ
உள்ளங்கள்தான்
allatī fī l-ṣudūri
ٱلَّتِى فِى ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ள
ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவைகளைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக் கூடிய செவி அவர்களுக்கு உண்டாகி விடும். நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக்) கண்கள்தாம் குருடாகி விட்டன. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௬)
Tafseer
௪௭

وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗۗ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ٤٧

wayastaʿjilūnaka
وَيَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
வேதனையை
walan yukh'lifa
وَلَن يُخْلِفَ
அறவே மாற்ற மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waʿdahu
وَعْدَهُۥۚ
தனது வாக்கை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
yawman
يَوْمًا
ஒரு நாள்
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம்
ka-alfi
كَأَلْفِ
ஆயிரம் போன்று
sanatin
سَنَةٍ
ஆண்டுகளை
mimmā taʿuddūna
مِّمَّا تَعُدُّونَ
நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து
(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உங்களிடம் அவசரப்படுகின்றனர். (நீங்கள் கூறுங்கள்: உங்கள் மீது வேதனை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்ற மாட்டான். நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்களுடைய) ஆயிரம் வருடங்களுக்குச் சமமாகும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௭)
Tafseer
௪௮

وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ ثُمَّ اَخَذْتُهَاۚ وَاِلَيَّ الْمَصِيْرُ ࣖ ٤٨

waka-ayyin
وَكَأَيِّن
எத்தனையோ
min qaryatin
مِّن قَرْيَةٍ
ஊர்கள்
amlaytu
أَمْلَيْتُ
நான் அவகாசம் அளித்தேன்
lahā
لَهَا
அவற்றுக்கு
wahiya
وَهِىَ
அவை
ẓālimatun
ظَالِمَةٌ
அநியாயம் செய்பவையாக இருக்க
thumma
ثُمَّ
பிறகு
akhadhtuhā
أَخَذْتُهَا
அவற்றைப்பிடித்தேன்
wa-ilayya
وَإِلَىَّ
என் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுதல் இருக்கிறது
நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) பின்னும் அவர்கள் அநியாயமே செய்யத் தலைப் பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம் தான் வரவேண்டியது இருக்கின்றது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௮)
Tafseer
௪௯

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّمَآ اَنَا۠ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌ ۚ ٤٩

qul
قُلْ
கூறுவீராக
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
innamā anā
إِنَّمَآ أَنَا۠
நிச்சயமாக நான் எல்லாம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்தான்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே(யன்றி வேறில்லை)."" ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௯)
Tafseer
௫௦

فَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ٥٠

fa-alladhīna
فَٱلَّذِينَ
ஆகவே, எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
lahum
لَهُم
அவர்களுக்கு உண்டு
maghfiratun
مَّغْفِرَةٌ
பாவமன்னிப்பு(ம்)
wariz'qun
وَرِزْقٌ
உணவும்
karīmun
كَرِيمٌ
கண்ணியமான
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௦)
Tafseer