Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 4

Al-Hajj

(al-Ḥajj)

௩௧

حُنَفَاۤءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖۗ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَاۤءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ اَوْ تَهْوِيْ بِهِ الرِّيْحُ فِيْ مَكَانٍ سَحِيْقٍ ٣١

ḥunafāa
حُنَفَآءَ
முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
ghayra mush'rikīna
غَيْرَ مُشْرِكِينَ
(எதையும்) இணையாக்காதவர்களாக
bihi
بِهِۦۚ
அவனுக்கு
waman
وَمَن
எவர்
yush'rik
يُشْرِكْ
இணை கற்பிப்பாரோ
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
faka-annamā
فَكَأَنَّمَا
போன்று
kharra
خَرَّ
கீழே விழுந்தார்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
fatakhṭafuhu
فَتَخْطَفُهُ
அவரைக் கொத்திச் சென்றன
l-ṭayru
ٱلطَّيْرُ
பறவைகள்
aw
أَوْ
அல்லது
tahwī
تَهْوِى
எறிந்தது
bihi
بِهِ
அவரை
l-rīḥu
ٱلرِّيحُ
காற்று
fī makānin
فِى مَكَانٍ
இடத்தில்
saḥīqin
سَحِيقٍ
தூரமான
அல்லாஹ்வுக்கு இணை வைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்தவனைப் போலாவான். அவனை (காகம், கழுகு போன்ற) பறவைகள் இறாய்ந்துக் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக்கொண்டு சென்றுவிடும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௧)
Tafseer
௩௨

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَاۤىِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ ٣٢

dhālika
ذَٰلِكَ
அவைதான்
waman
وَمَن
இன்னும் எவர்
yuʿaẓẓim
يُعَظِّمْ
கண்ணியப் படுத்துவாரோ
shaʿāira
شَعَٰٓئِرَ
அடையாளங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-innahā
فَإِنَّهَا
நிச்சயமாக அது
min taqwā
مِن تَقْوَى
இறையச்சத்திலிருந்து
l-qulūbi
ٱلْقُلُوبِ
உள்ளங்களின்
இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௨)
Tafseer
௩௩

لَكُمْ فِيْهَا مَنَافِعُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ مَحِلُّهَآ اِلَى الْبَيْتِ الْعَتِيْقِ ࣖ ٣٣

lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
இவற்றில்
manāfiʿu
مَنَٰفِعُ
பலன்கள் உள்ளன
ilā
إِلَىٰٓ
வரை
ajalin
أَجَلٍ
ஒரு காலம்
musamman
مُّسَمًّى
குறிப்பிட்ட
thumma
ثُمَّ
பின்னர்
maḥilluhā
مَحِلُّهَآ
அவற்றுக்குரிய இடம்
ilā
إِلَى
பக்கம்
l-bayti
ٱلْبَيْتِ
அல் பைத்துல்
l-ʿatīqi
ٱلْعَتِيقِ
அதீக்
(குர்பானிக்காக ஏற்பட்ட ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நீங்கள் அவைகளைக் கொண்டு பயனடையலாம். பின்னர், அவைகளை கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்திடம் சேர்ப்பித்து விட வேண்டியது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௩)
Tafseer
௩௪

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِۗ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗٓ اَسْلِمُوْاۗ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ ٣٤

walikulli
وَلِكُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயத்திற்கும்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கி இருக்கிறோம்
mansakan
مَنسَكًا
குர்பானியை அறுப்பதை
liyadhkurū
لِّيَذْكُرُوا۟
நினைவு கூருவதற்காக
is'ma
ٱسْمَ
பெயரை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalā
عَلَىٰ
மீது
mā razaqahum
مَا رَزَقَهُم
அவர்களுக்குக் கொடுத்த
min bahīmati l-anʿāmi
مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِۗ
கால்நடைகளின்
fa-ilāhukum
فَإِلَٰهُكُمْ
ஆக, உங்கள் கடவுள்
ilāhun
إِلَٰهٌ
ஒரு கடவுள்தான்
wāḥidun
وَٰحِدٌ
ஒரே
falahu
فَلَهُۥٓ
ஆகவே, அவனுக்கே
aslimū
أَسْلِمُوا۟ۗ
பணிந்து வழிபடுங்கள்
wabashiri
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
l-mukh'bitīna
ٱلْمُخْبِتِينَ
கீழ்ப்படிந்தவர்களுக்கு
குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௪)
Tafseer
௩௫

الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصَّابِرِيْنَ عَلٰى مَآ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ٣٥

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
idhā dhukira
إِذَا ذُكِرَ
நினைவுகூரப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wajilat
وَجِلَتْ
பயப்படும்
qulūbuhum
قُلُوبُهُمْ
அவர்களது உள்ளங்கள்
wal-ṣābirīna
وَٱلصَّٰبِرِينَ
இன்னும் பொறுமையாக இருப்பார்கள்
ʿalā
عَلَىٰ
மீது
mā aṣābahum
مَآ أَصَابَهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டவற்றின்
wal-muqīmī
وَٱلْمُقِيمِى
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
wamimmā razaqnāhum
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் தானமும் செய்வார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௫)
Tafseer
௩௬

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَاۤىِٕرِ اللّٰهِ لَكُمْ فِيْهَا خَيْرٌۖ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَاۤفَّۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّۗ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٣٦

wal-bud'na
وَٱلْبُدْنَ
இன்னும் கொழுத்த ஒட்டகங்கள்
jaʿalnāhā
جَعَلْنَٰهَا
அவற்றை நாம் ஆக்கி இருக்கின்றோம்
lakum
لَكُم
உங்களுக்கு
min shaʿāiri
مِّن شَعَٰٓئِرِ
அடையாள சின்னங்களில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அவற்றில்
khayrun
خَيْرٌۖ
நன்மைகள் உண்டு
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
ஆகவே கூறுங்கள்
is'ma
ٱسْمَ
பெயரை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
ṣawāffa
صَوَآفَّۖ
நின்றவையாக இருக்க
fa-idhā wajabat
فَإِذَا وَجَبَتْ
சாய்ந்து விட்டால்
junūbuhā
جُنُوبُهَا
அவற்றின் விலாக்கள்
fakulū
فَكُلُوا۟
சாப்பிடுங்கள்
min'hā
مِنْهَا
அவற்றிலிருந்து
wa-aṭʿimū
وَأَطْعِمُوا۟
இன்னும் உணவளியுங்கள்
l-qāniʿa
ٱلْقَانِعَ
யாசிப்பவருக்கும்
wal-muʿ'tara
وَٱلْمُعْتَرَّۚ
எதிர்பார்த்து வருபவருக்கும்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
sakharnāhā
سَخَّرْنَٰهَا
அதை வசப்படுத்தித் தந்தோம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத்தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்திவைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௬)
Tafseer
௩௭

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَاۤؤُهَا وَلٰكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْۗ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ ٣٧

lan yanāla
لَن يَنَالَ
அறவே அடையாது
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
luḥūmuhā
لُحُومُهَا
அவற்றின்இறைச்சிகள்
walā dimāuhā
وَلَا دِمَآؤُهَا
இன்னும் அவற்றின்இரத்தங்கள்
walākin
وَلَٰكِن
எனினும்
yanāluhu
يَنَالُهُ
அவனை அடையும்
l-taqwā
ٱلتَّقْوَىٰ
இறையச்சம்
minkum
مِنكُمْۚ
உங்களிடமிருந்து
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
sakharahā
سَخَّرَهَا
அவற்றை வசப்படுத்திக் கொடுத்தான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
litukabbirū
لِتُكَبِّرُوا۟
பெருமைப் படுத்துவதற்காக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿalā mā hadākum
عَلَىٰ مَا هَدَىٰكُمْۗ
அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
wabashiri
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு
(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்களுடைய இறை அச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்றி செய்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௭)
Tafseer
௩௮

۞ اِنَّ اللّٰهَ يُدَافِعُ عَنِ الَّذِيْنَ اٰمَنُوْاۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوْرٍ ࣖ ٣٨

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yudāfiʿu
يُدَٰفِعُ
தடுத்து விடுவான்
ʿani
عَنِ
விட்டும்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ۗ
நம்பிக்கை கொண்டவர்களை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
kulla
كُلَّ
எல்லா
khawwānin
خَوَّانٍ
மோசடிக்காரர்களை
kafūrin
كَفُورٍ
நன்றிகெட்டவர்களை
நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கில் இருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரரையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௮)
Tafseer
௩௯

اُذِنَ لِلَّذِيْنَ يُقَاتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْاۗ وَاِنَّ اللّٰهَ عَلٰى نَصْرِهِمْ لَقَدِيْرٌ ۙ ٣٩

udhina
أُذِنَ
அனுமதிக்கப்பட்டுள்ளது
lilladhīna yuqātalūna
لِلَّذِينَ يُقَٰتَلُونَ
சண்டையிடப்படக் கூடியவர்களுக்கு
bi-annahum
بِأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ẓulimū
ظُلِمُوا۟ۚ
அநீதியிழைக்கப்பட்டார்கள்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalā naṣrihim
عَلَىٰ نَصْرِهِمْ
அவர்களுக்கு உதவி செய்ய
laqadīrun
لَقَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௯)
Tafseer
௪௦

ۨالَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّآ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ۗوَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًاۗ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗۗ اِنَّ اللّٰهَ لَقَوِيٌّ عَزِيْزٌ ٤٠

alladhīna ukh'rijū
ٱلَّذِينَ أُخْرِجُوا۟
எவர்கள்/வெளியேற்றப்பட்டார்கள்
min diyārihim
مِن دِيَٰرِهِم
தங்கள் இல்லங்களிலிருந்து
bighayri ḥaqqin
بِغَيْرِ حَقٍّ
எவ்வித நியாயமுமின்றி
illā
إِلَّآ
தவிர
an yaqūlū
أَن يَقُولُوا۟
அவர்கள் கூறுவதற்காகவே
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
walawlā dafʿu
وَلَوْلَا دَفْعُ
பாதுகாப்பது இல்லை என்றால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
baʿḍahum
بَعْضَهُم
அவர்களில் சிலரை
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரைக் கொண்டு
lahuddimat
لَّهُدِّمَتْ
உடைக்கப்பட்டிருக்கும்
ṣawāmiʿu
صَوَٰمِعُ
துறவிகளின் தங்குமிடங்களும்
wabiyaʿun
وَبِيَعٌ
கிறித்துவ ஆலயங்களும்
waṣalawātun
وَصَلَوَٰتٌ
யூத ஆலயங்களும்
wamasājidu
وَمَسَٰجِدُ
மஸ்ஜிதுகளும்
yudh'karu
يُذْكَرُ
நினைவு கூரப்படும்
fīhā
فِيهَا
அதில்
us'mu
ٱسْمُ
பெயரை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kathīran
كَثِيرًاۗ
அதிகமாக
walayanṣuranna
وَلَيَنصُرَنَّ
நிச்சயமாக அவருக்கு உதவுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
man
مَن
எவர்
yanṣuruhu
يَنصُرُهُۥٓۗ
அவனுக்கு உதவுவாரோ
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
laqawiyyun
لَقَوِىٌّ
வலிமை உள்ளவன்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪௦)
Tafseer