Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 3

Al-Hajj

(al-Ḥajj)

௨௧

وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ ٢١

walahum
وَلَهُم
இன்னும் அவர்களுக்கு
maqāmiʿu
مَّقَٰمِعُ
சம்பட்டிகள்
min ḥadīdin
مِنْ حَدِيدٍ
இரும்பு
அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளுண்டு. (அதனைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்.) ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௧)
Tafseer
௨௨

كُلَّمَآ اَرَادُوْٓا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَا وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ࣖ ٢٢

kullamā arādū
كُلَّمَآ أَرَادُوٓا۟
நாடும்போதெல்லாம்
an yakhrujū
أَن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேறுவதற்கு
min'hā
مِنْهَا
அதிலிருந்து
min ghammin
مِنْ غَمٍّ
துக்கத்தால்
uʿīdū
أُعِيدُوا۟
திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
fīhā
فِيهَا
அதில்
wadhūqū
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-ḥarīqi
ٱلْحَرِيقِ
பொசுக்கக்கூடிய
இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும்போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு "எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்" (எனவும் கூறப்படும்). ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௨)
Tafseer
௨௩

اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًاۗ وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ ٢٣

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yud'khilu
يُدْخِلُ
நுழைப்பான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
yuḥallawna
يُحَلَّوْنَ
அணிவிக்கப் படுவார்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
min asāwira
مِنْ أَسَاوِرَ
வளையல்களும்
min dhahabin
مِن ذَهَبٍ
தங்கத்தினாலான
walu'lu-an
وَلُؤْلُؤًاۖ
இன்னும் முத்து
walibāsuhum
وَلِبَاسُهُمْ
இன்னும் அவர்களது ஆடை
fīhā
فِيهَا
அவற்றில்
ḥarīrun
حَرِيرٌ
பட்டாகும்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௩)
Tafseer
௨௪

وَهُدُوْٓا اِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِۚ وَهُدُوْٓا اِلٰى صِرَاطِ الْحَمِيْدِ ٢٤

wahudū
وَهُدُوٓا۟
இன்னும் வழிகாட்டப்பட்டார்கள்
ilā l-ṭayibi
إِلَى ٱلطَّيِّبِ
நல்லதற்கு
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
பேச்சுகளில்
wahudū
وَهُدُوٓا۟
இன்னும் வழிகாட்டப்பட்டார்கள்
ilā ṣirāṭi
إِلَىٰ صِرَٰطِ
பாதைக்கு
l-ḥamīdi
ٱلْحَمِيدِ
புகழுக்குரியவனின்
பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௪)
Tafseer
௨௫

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِيْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَاۤءً ۨالْعَاكِفُ فِيْهِ وَالْبَادِۗ وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَادٍۢ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَلِيْمٍ ࣖ ٢٥

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
wayaṣuddūna
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wal-masjidi
وَٱلْمَسْجِدِ
இன்னும் அல்மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِ
ஹராம்
alladhī
ٱلَّذِى
எது
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
அதை ஆக்கியிருக்கிறோம்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
sawāan
سَوَآءً
பொதுவானது
l-ʿākifu
ٱلْعَٰكِفُ
தங்கிஇருப்பவருக்கும்
fīhi
فِيهِ
அதில்
wal-bādi
وَٱلْبَادِۚ
வெளியிலிருந்து வருபவருக்கும்
waman
وَمَن
எவர்
yurid fīhi
يُرِدْ فِيهِ
அதில் நாடுவாரோ
bi-il'ḥādin
بِإِلْحَادٍۭ
வரம்பு மீறுவதை
biẓul'min
بِظُلْمٍ
அநியாயமாக
nudhiq'hu
نُّذِقْهُ
அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
min ʿadhābin
مِنْ عَذَابٍ
வேதனையை
alīmin
أَلِيمٍ
வலி தருகின்ற
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து அல்லாஹ்வின் பாதை(யில் செல்வதை)யும் தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்களாயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தடை செய்து கொண்டு, அதில் மார்க்கத்திற்கு விரோதமான அநியாயம் செய்ய விரும்பினால், அவர்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௫)
Tafseer
௨௬

وَاِذْ بَوَّأْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِيْ شَيْـًٔا وَّطَهِّرْ بَيْتِيَ لِلطَّاۤىِٕفِيْنَ وَالْقَاۤىِٕمِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ٢٦

wa-idh bawwanā
وَإِذْ بَوَّأْنَا
நாம் உறுதிப்படுத்திய சமயத்தை
li-ib'rāhīma
لِإِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
makāna
مَكَانَ
இடத்தை
l-bayti
ٱلْبَيْتِ
வீட்டுடைய
an lā tush'rik
أَن لَّا تُشْرِكْ
நீர் இணைவைக்காதீர்
bī shayan
بِى شَيْـًٔا
எனக்கு எதையும்
waṭahhir
وَطَهِّرْ
இன்னும் சுத்தமாக வைத்திருப்பீராக
baytiya
بَيْتِىَ
எனது வீட்டை
lilṭṭāifīna
لِلطَّآئِفِينَ
தவாஃப் செய்பவர்களுக்காக
wal-qāimīna
وَٱلْقَآئِمِينَ
இன்னும் நின்று தொழுபவர்களுக்காக
wal-rukaʿi
وَٱلرُّكَّعِ
இன்னும் குனிந்து தொழுபவர்களுக்காக
l-sujūdi
ٱلسُّجُودِ
சிரம் பணிந்து தொழுபவர்களுக்காக
(நபியே!) இப்ராஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) "நீங்கள் எனக்கு எவரையும் இணையாக்காதீர்கள். என்னுடைய (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில், ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௬)
Tafseer
௨௭

وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَأْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّأْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ ٢٧

wa-adhin
وَأَذِّن
இன்னும் அறிவிப்(புச் செய்து அழைப்)பீராக!
fī l-nāsi
فِى ٱلنَّاسِ
மக்களுக்கு
bil-ḥaji
بِٱلْحَجِّ
ஹஜ்ஜுக்காக
yatūka
يَأْتُوكَ
உம்மிடம் வருவார்கள்
rijālan
رِجَالًا
நடந்தவர்களாகவும்
waʿalā kulli
وَعَلَىٰ كُلِّ
இன்னும் மீது/எல்லாம்
ḍāmirin
ضَامِرٍ
மெலிந்த வாகனம்
yatīna
يَأْتِينَ
அவர்கள் வருவார்கள்
min kulli fajjin
مِن كُلِّ فَجٍّ
பாதைகளிலிருந்து
ʿamīqin
عَمِيقٍ
தூரமான
(அவரை நோக்கி) "ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௭)
Tafseer
௨௮

لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِيْٓ اَيَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِۚ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَاۤىِٕسَ الْفَقِيْرَ ۖ ٢٨

liyashhadū
لِّيَشْهَدُوا۟
அவர்கள் அடைவதற்காக
manāfiʿa
مَنَٰفِعَ
பலாபலன்களை
lahum
لَهُمْ
அவர்கள் தங்களுக்குரிய
wayadhkurū
وَيَذْكُرُوا۟
நினைவு கூர்வதற்காக
is'ma
ٱسْمَ
பெயர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
fī ayyāmin
فِىٓ أَيَّامٍ
நாட்களில்
maʿlūmātin
مَّعْلُومَٰتٍ
குறிப்பிட்ட
ʿalā
عَلَىٰ
மீது
mā razaqahum
مَا رَزَقَهُم
அவர்களுக்குக் கொடுத்த
min
مِّنۢ
இருந்து
bahīmati
بَهِيمَةِ
பிராணிகள்
l-anʿāmi
ٱلْأَنْعَٰمِۖ
கால்நடைகள்
fakulū
فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
min'hā
مِنْهَا
அவற்றிலிருந்து
wa-aṭʿimū
وَأَطْعِمُوا۟
இன்னும் உணவளியுங்கள்
l-bāisa
ٱلْبَآئِسَ
வறியவருக்கு(ம்)
l-faqīra
ٱلْفَقِيرَ
ஏழைக்கு(ம்)
(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்.) குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௮)
Tafseer
௨௯

ثُمَّ لْيَقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ ٢٩

thumma
ثُمَّ
பிறகு
l'yaqḍū
لْيَقْضُوا۟
இன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும்
tafathahum
تَفَثَهُمْ
தங்களது அழுக்குகளை
walyūfū
وَلْيُوفُوا۟
இன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்
nudhūrahum
نُذُورَهُمْ
நேர்ச்சைகளை தங்களது
walyaṭṭawwafū
وَلْيَطَّوَّفُوا۟
இன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்
bil-bayti
بِٱلْبَيْتِ
வீட்டை
l-ʿatīqi
ٱلْعَتِيقِ
மிகப் பழமையான
பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்களுடைய நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௯)
Tafseer
௩௦

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖۗ وَاُحِلَّتْ لَكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۙ ٣٠

dhālika
ذَٰلِكَ
அவைதான்
waman
وَمَن
எவர்
yuʿaẓẓim
يُعَظِّمْ
மதிப்பார்
ḥurumāti
حُرُمَٰتِ
புனிதங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
fahuwa
فَهُوَ
அது
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
lahu
لَّهُۥ
அவருக்கு
ʿinda rabbihi
عِندَ رَبِّهِۦۗ
அவருடைய இறைவனிடம்
wa-uḥillat
وَأُحِلَّتْ
ஆகுமாக்கப் பட்டுள்ளன
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-anʿāmu
ٱلْأَنْعَٰمُ
கால்நடைகள்
illā
إِلَّا
தவிர
mā yut'lā
مَا يُتْلَىٰ
ஓதிக்காட்டப்படுபவற்றை
ʿalaykum
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
fa-ij'tanibū
فَٱجْتَنِبُوا۟
விலகிக்கொள்ளுங்கள்
l-rij'sa
ٱلرِّجْسَ
அசுத்தங்களை
mina l-awthāni
مِنَ ٱلْأَوْثَٰنِ
சிலைகளை
wa-ij'tanibū
وَٱجْتَنِبُوا۟
இன்னும் விலகிக் கொள்ளுங்கள்
qawla
قَوْلَ
பேச்சை (விட்டு)
l-zūri
ٱلزُّورِ
பொய்
இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பான வைகளை எவர் மகிமைப்படுத்துகின்றாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பித்த (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வைகளைத் தவிர (மற்றவைகளைப் புசிப்பது) ஆகும். ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். அன்றி, பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்." ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩௦)
Tafseer