Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Word by Word

Al-Hajj

(al-Ḥajj)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيْمٌ ١

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
rabbakum
رَبَّكُمْۚ
உங்கள் இறைவனை
inna
إِنَّ
நிச்சயமாக
zalzalata
زَلْزَلَةَ
அதிர்வு
l-sāʿati
ٱلسَّاعَةِ
மறுமையின்
shayon
شَىْءٌ
ஒன்றாகும்
ʿaẓīmun
عَظِيمٌ
மிகப்பெரிய
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧)
Tafseer

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ ٢

yawma
يَوْمَ
நாளில்
tarawnahā
تَرَوْنَهَا
நீங்கள் அதை பார்க்கின்ற
tadhhalu
تَذْهَلُ
மறந்து விடுவார்(கள்)
kullu
كُلُّ
எல்லோரும்
mur'ḍiʿatin
مُرْضِعَةٍ
பால் கொடுப்பவள்
ʿammā arḍaʿat
عَمَّآ أَرْضَعَتْ
தான் பால் கொடுத்ததை
wataḍaʿu
وَتَضَعُ
இன்னும் ஈன்று விடுவார்(கள்)
kullu
كُلُّ
எல்லோரும்
dhāti ḥamlin
ذَاتِ حَمْلٍ
கர்ப்பம் தரித்த பெண்(கள்)
ḥamlahā
حَمْلَهَا
தனது கர்ப்பத்தை
watarā
وَتَرَى
இன்னும் நீர் பார்ப்பீர்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
sukārā
سُكَٰرَىٰ
மயக்கமுற்றவர்களாக
wamā hum
وَمَا هُم
அவர்கள் அல்லர்
bisukārā
بِسُكَٰرَىٰ
மயக்கமுற்றவர்கள்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
ʿadhāba
عَذَابَ
தண்டனை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
shadīdun
شَدِيدٌ
மிகக் கடினமானது
அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினாலன்று. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.) ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨)
Tafseer

وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّيَتَّبِعُ كُلَّ شَيْطٰنٍ مَّرِيْدٍۙ ٣

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில்
man yujādilu
مَن يُجَٰدِلُ
எவன்/ தர்க்கிக்கின்றான்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
bighayri
بِغَيْرِ
இன்றி
ʿil'min
عِلْمٍ
கல்வி அறிவு
wayattabiʿu
وَيَتَّبِعُ
இன்னும் பின்பற்றுகிறான்
kulla
كُلَّ
எல்லா
shayṭānin
شَيْطَٰنٍ
ஷைத்தான்(களை)
marīdin
مَّرِيدٍ
திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய
மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்துகொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௩)
Tafseer

كُتِبَ عَلَيْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ يُضِلُّهٗ وَيَهْدِيْهِ اِلٰى عَذَابِ السَّعِيْرِ ٤

kutiba
كُتِبَ
விதிக்கப்பட்டுவிட்டது
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக அவன்
man
مَن
யார்
tawallāhu
تَوَلَّاهُ
பின்பற்றுகின்றார்/அவனை
fa-annahu
فَأَنَّهُۥ
நிச்சயமாக அவன்
yuḍilluhu
يُضِلُّهُۥ
வழிகெடுப்பான்/அவரை
wayahdīhi
وَيَهْدِيهِ
இன்னும் வழிகாட்டுவான்/அவருக்கு
ilā
إِلَىٰ
பக்கம்
ʿadhābi
عَذَابِ
வேதனையின்
l-saʿīri
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
எவன் (ஷைத்தானாகிய) அவனை சிநேகிதனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பக்கமே செலுத்திவிடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௪)
Tafseer

يٰٓاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِيْ رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْۗ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَاۤءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْٓا اَشُدَّكُمْۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْـًٔاۗ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَآ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاۤءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ ٥

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
fī raybin
فِى رَيْبٍ
சந்தேகத்தில்
mina l-baʿthi
مِّنَ ٱلْبَعْثِ
எழுப்பப்படுவதில்
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாம்தான்
khalaqnākum
خَلَقْنَٰكُم
உங்களைப் படைத்தோம்
min turābin
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
பின்னர்
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்தும்
thumma
ثُمَّ
பின்னர்
min ʿalaqatin
مِنْ عَلَقَةٍ
இரத்தக் கட்டியிலிருந்தும்
thumma
ثُمَّ
பின்னர்
min muḍ'ghatin
مِن مُّضْغَةٍ
சதைத்துண்டிலிருந்து
mukhallaqatin
مُّخَلَّقَةٍ
முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட
waghayri mukhallaqatin
وَغَيْرِ مُخَلَّقَةٍ
முழுமையான உருவம் கொடுக்கப்படாத
linubayyina
لِّنُبَيِّنَ
ஏனெனில் விவரிப்பதற்காக
lakum
لَكُمْۚ
உங்களுக்கு
wanuqirru
وَنُقِرُّ
தங்க வைக்கிறோம்
fī l-arḥāmi
فِى ٱلْأَرْحَامِ
கர்ப்பப் பைகளில்
mā nashāu
مَا نَشَآءُ
நாம் நாடியதை
ilā
إِلَىٰٓ
வரை
ajalin
أَجَلٍ
தவணை
musamman
مُّسَمًّى
குறிப்பிட்ட
thumma
ثُمَّ
பிறகு
nukh'rijukum
نُخْرِجُكُمْ
உங்களை வெளியாக்குகிறோம்
ṭif'lan
طِفْلًا
குழந்தைகளாக
thumma
ثُمَّ
பிறகு
litablughū
لِتَبْلُغُوٓا۟
நீங்கள் அடைவதற்காக
ashuddakum
أَشُدَّكُمْۖ
வலிமையையும் உங்களது
waminkum
وَمِنكُم
உங்களில்
man yutawaffā
مَّن يُتَوَفَّىٰ
உயிர் கைப்பற்றப்படுகின்றவரும்
waminkum
وَمِنكُم
இன்னும் உங்களில்
man
مَّن
எவர்
yuraddu
يُرَدُّ
திருப்பப்படுகின்றார்
ilā
إِلَىٰٓ
வரை
ardhali l-ʿumuri
أَرْذَلِ ٱلْعُمُرِ
தள்ளாத வயது
likaylā yaʿlama
لِكَيْلَا يَعْلَمَ
முடிவில் அறியாமல் ஆகிவிடுகிறார்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ʿil'min
عِلْمٍ
அறிந்து இருப்பது
shayan
شَيْـًٔاۚ
எதையும்
watarā
وَتَرَى
பார்க்கிறீர்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
hāmidatan
هَامِدَةً
அழிந்து போனதாக
fa-idhā anzalnā
فَإِذَآ أَنزَلْنَا
நாம் இறக்கினால்
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
l-māa
ٱلْمَآءَ
மழைநீரை
ih'tazzat
ٱهْتَزَّتْ
அது அசைகிறது
warabat
وَرَبَتْ
இன்னும் அதிகப்படுத்துகிறது
wa-anbatat
وَأَنۢبَتَتْ
இன்னும் முளைக்க வைக்கிறது
min kulli
مِن كُلِّ
எல்லா விதமான
zawjin bahījin
زَوْجٍۭ بَهِيجٍ
அழகிய தாவரங்களை
மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫)
Tafseer

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّهٗ يُحْيِ الْمَوْتٰى وَاَنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ۙ ٦

dhālika
ذَٰلِكَ
இது
bi-anna
بِأَنَّ
ஏனெனில் நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையானவன்
wa-annahu
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
yuḥ'yī
يُحْىِ
உயிர்ப்பிக்கிறான்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
wa-annahu
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கின்ற)து. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬)
Tafseer

وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَاۙ وَاَنَّ اللّٰهَ يَبْعَثُ مَنْ فِى الْقُبُوْرِ ٧

wa-anna
وَأَنَّ
மேலும் நிச்சயமாக
l-sāʿata
ٱلسَّاعَةَ
மறுமை
ātiyatun
ءَاتِيَةٌ
வரக்கூடியதுதான்
lā rayba
لَّا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhā
فِيهَا
அதில்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
மேலும் நிச்சயமாக அல்லாஹ்
yabʿathu
يَبْعَثُ
எழுப்புவான்
man fī l-qubūri
مَن فِى ٱلْقُبُورِ
புதைக்குழிகளில் உள்ளவர்களை
விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதிகளில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭)
Tafseer

وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَّلَا كِتٰبٍ مُّنِيْرٍ ۙ ٨

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மனிதர்களில்
man yujādilu
مَن يُجَٰدِلُ
எவர்/தர்க்கிப்பார்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍ
எவ்வித அறிவுமில்லாமலும்
walā hudan
وَلَا هُدًى
நேர்வழி இல்லாமலும்
walā kitābin
وَلَا كِتَٰبٍ
வேதமும் இல்லாமலும்
munīrin
مُّنِيرٍ
வெளிப்படுத்தக்கூடிய
மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) யாதொரு கல்வியும், யாதொரு தர்க்கரீதியான ஆதாரமும், யாதொரு வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௮)
Tafseer

ثَانِيَ عِطْفِهٖ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗ لَهٗ فِى الدُّنْيَا خِزْيٌ وَّنُذِيْقُهٗ يَوْمَ الْقِيٰمَةِ عَذَابَ الْحَرِيْقِ ٩

thāniya ʿiṭ'fihi
ثَانِىَ عِطْفِهِۦ
தனது கழுத்தைத் திருப்பியவனாக
liyuḍilla
لِيُضِلَّ
தடுப்பதற்காக
ʿan sabīli
عَن سَبِيلِ
மார்க்கத்திலிருந்து
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
lahu
لَهُۥ
அவனுக்கு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகத்தில்
khiz'yun
خِزْىٌۖ
கேவலம் உண்டு
wanudhīquhu
وَنُذِيقُهُۥ
நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
ʿadhāba l-ḥarīqi
عَذَابَ ٱلْحَرِيقِ
பொசுக்கக்கூடிய வேதனையை
அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்.) இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௯)
Tafseer
௧௦

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ يَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ ࣖ ١٠

dhālika
ذَٰلِكَ
அது
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதன் காரணமாகவும்
yadāka
يَدَاكَ
உனது கரங்கள்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயம் அல்லாஹ்
laysa
لَيْسَ
இல்லை
biẓallāmin
بِظَلَّٰمٍ
அநியாயம் செய்பவன்
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு
(அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்தனுப்பிய செயல்களின் பலன்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் எவருக்கும் (தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்பவனன்று. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௦)
Tafseer