Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮௪

Qur'an Surah Al-Anbya Verse 84

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ ۚ (الأنبياء : ٢١)

fa-is'tajabnā
فَٱسْتَجَبْنَا
So We responded
ஆகவே, நாம் பதிலளித்தோம்
lahu
لَهُۥ
to him
அவருக்கு
fakashafnā
فَكَشَفْنَا
and We removed
அகற்றினோம்
mā bihi
مَا بِهِۦ
what (was) on him
அவருக்கு இருந்த
min ḍurrin
مِن ضُرٍّۖ
of (the) adversity
தீங்குகளை
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
And We gave him
இன்னும் அவருக்கு வழங்கினோம்
ahlahu
أَهْلَهُۥ
his family
அவருடைய குடும்பத்தை
wamith'lahum
وَمِثْلَهُم
and (the) like thereof
அவர்கள் போன்றவர்களை
maʿahum
مَّعَهُمْ
with them
அவர்களுடன்
raḥmatan
رَحْمَةً
(as) Mercy
கருணையாக
min ʿindinā
مِّنْ عِندِنَا
from Ourselves from Ourselves
நம் புறத்திலிருந்து
wadhik'rā
وَذِكْرَىٰ
and a reminder
இன்னும் நினைவூட்டலாகும்
lil'ʿābidīna
لِلْعَٰبِدِينَ
for the worshippers
வணக்கசாலிகளுக்கு

Transliteration:

Fastajabnaa lahoo fakashaf naa maa bihee min durrinw wa aatainaahu ahlahoo wa mislahum ma'ahum rahmatam min 'indinaa wa zikraa lil'aabideen (QS. al-ʾAnbiyāʾ:84)

English Sahih International:

So We responded to him and removed what afflicted him of adversity. And We gave him [back] his family and the like thereof with them as mercy from Us and a reminder for the worshippers [of Allah]. (QS. Al-Anbya, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் பின்னும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இஃது (எனக்குப் பயந்து) என்னை வணங்கு லிபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮௪)

Jan Trust Foundation

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவருக்கு நாம் பதிலளித்தோம். அவருக்கு இருந்த தீங்குகளை (அவரைவிட்டு) அகற்றினோம். அவருக்கு அவருடைய குடும்பத்தையும் அவர்களுடன் அவர்கள் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம், நம் புறத்திலிருந்து (அவர் மீது) கருணையாக இருப்பதற்காகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டலாக (-உபதேசமாக) இருப்பதற்காகவும்.