குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮௨
Qur'an Surah Al-Anbya Verse 82
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنَ الشَّيٰطِيْنِ مَنْ يَّغُوْصُوْنَ لَهٗ وَيَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِيْنَ ۙ (الأنبياء : ٢١)
- wamina l-shayāṭīni
- وَمِنَ ٱلشَّيَٰطِينِ
- And of the devils
- இன்னும் ஷைத்தான்களில்
- man yaghūṣūna
- مَن يَغُوصُونَ
- (were some) who would dive
- எவர்/மூழ்கின்றார்கள்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்காக
- wayaʿmalūna
- وَيَعْمَلُونَ
- and would do
- இன்னும் செய்கின்றார்கள்
- ʿamalan
- عَمَلًا
- work
- செயலை
- dūna
- دُونَ
- other than
- அல்லாத
- dhālika
- ذَٰلِكَۖ
- that
- அது
- wakunnā
- وَكُنَّا
- And We were
- நாம் இருந்தோம்
- lahum
- لَهُمْ
- of them
- அவர்களை
- ḥāfiẓīna
- حَٰفِظِينَ
- Guardians
- பாதுகாப்பவர்களாக
Transliteration:
Wa minash Shayaateeni mai yaghoosoona lahoo wa ya'maloona 'amalan doona zaalika wa kunna lahum baafizeen(QS. al-ʾAnbiyāʾ:82)
English Sahih International:
And of the devils [i.e., jinn] were those who dived for him and did work other than that. And We were of them a guardian. (QS. Al-Anbya, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவைகளைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத்தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்து கொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮௨)
Jan Trust Foundation
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஷைத்தான்களில் (கடலில்) அவருக்காக மூழ்கின்றவர்களையும் அது அல்லாத வேறு செயலை செய்கின்றவர்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்தினோம்). அவர்களை பாதுகா(த்து கண்கானி)ப்பவர்களாக நாம் இருந்தோம்.