Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮௦

Qur'an Surah Al-Anbya Verse 80

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَأْسِكُمْۚ فَهَلْ اَنْتُمْ شَاكِرُوْنَ (الأنبياء : ٢١)

waʿallamnāhu
وَعَلَّمْنَٰهُ
And We taught him
நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம்
ṣanʿata
صَنْعَةَ
(the) making
செய்வதை
labūsin
لَبُوسٍ
(of) coats of armor
ஆயுதங்களை
lakum
لَّكُمْ
for you
உங்களுக்காக
lituḥ'ṣinakum
لِتُحْصِنَكُم
to protect you
உங்களை பாதுகாப்பதற்காக
min basikum
مِّنۢ بَأْسِكُمْۖ
from your battle
உங்கள் போரில்
fahal antum
فَهَلْ أَنتُمْ
Then will you
ஆகவே ?/நீங்கள்
shākirūna
شَٰكِرُونَ
(be) grateful?
நன்றி செலுத்துவீர்கள்

Transliteration:

Wa 'allamanaahu san'ata laboosil lakum lituhsinakum mim baasikum fahal antum shaakiroon (QS. al-ʾAnbiyāʾ:80)

English Sahih International:

And We taught him the fashioning of coats of armor to protect you from your [enemy in] battle. So will you then be grateful? (QS. Al-Anbya, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

(போரில் ஈட்டி, கத்தி ஆகியவைகளின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா? (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮௦)

Jan Trust Foundation

இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களை உங்கள் போரில் பாதுகாப்பதற்காக உங்களுக்காக ஆயுதங்களை செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா?