Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭௩

Qur'an Surah Al-Anbya Verse 73

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَآ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَاۤءَ الزَّكٰوةِۚ وَكَانُوْا لَنَا عٰبِدِيْنَ ۙ (الأنبياء : ٢١)

wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
And We made them
இன்னும் அவர்களை ஆக்கினோம்
a-immatan
أَئِمَّةً
leaders
தலைவர்களாக
yahdūna
يَهْدُونَ
they guide
நேர்வழி காட்டுகின்றார்கள்
bi-amrinā
بِأَمْرِنَا
by Our Command
நமது கட்டளையின்படி
wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
And We inspired
இன்னும் நாம் வஹீ அறிவித்தோம்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களுக்கு
fiʿ'la
فِعْلَ
(the) doing
செய்வதற்கும்
l-khayrāti
ٱلْخَيْرَٰتِ
(of) good deeds
நன்மைகளை
wa-iqāma
وَإِقَامَ
and establishment
இன்னும் நிலைநிறுத்துவதற்கு
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
(of) the prayer
தொழுகையை
waītāa
وَإِيتَآءَ
and giving
இன்னும் கொடுப்பதற்கு
l-zakati
ٱلزَّكَوٰةِۖ
(of) zakah;
ஸகாத்தை
wakānū
وَكَانُوا۟
and they were
அவர்கள் இருந்தார்கள்
lanā
لَنَا
of Us
நம்மை
ʿābidīna
عَٰبِدِينَ
worshippers
வணங்குபவர்களாக

Transliteration:

Wa ja'alnaahum a'immatany yahdoona bi amrinaa wa awhainaaa ilaihim fi'lal khairaati wa iqaamas Salaati wa eetaaa'az Zakaati wa kaanoo lanaa 'aabideen (QS. al-ʾAnbiyāʾ:73)

English Sahih International:

And We made them leaders guiding by Our command. And We inspired to them the doing of good deeds, establishment of prayer, and giving of Zakah; and they were worshippers of Us. (QS. Al-Anbya, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். அன்றி, நன்மையான காரியங்களைச் செய்யும்படியும், தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், "ஜகாத்" கொடுத்து வரும்படியாகவும் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭௩)

Jan Trust Foundation

இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது கட்டளையின்படி நேர்வழிகாட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். நன்மைகளை செய்வதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும், ஸகாத்தை கொடுப்பதற்கும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள்.