குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௫
Qur'an Surah Al-Anbya Verse 65
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِهِمْۚ لَقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ (الأنبياء : ٢١)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- nukisū
- نُكِسُوا۟
- they were turned
- மாறினர்
- ʿalā ruūsihim
- عَلَىٰ رُءُوسِهِمْ
- on their heads
- அவர்கள் தலைகீழாக
- laqad
- لَقَدْ
- "Verily
- திட்டவட்டமாக
- ʿalim'ta
- عَلِمْتَ
- you know
- நீர் அறிவீர்
- mā hāulāi yanṭiqūna
- مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
- not these (can) speak!"
- இவை பேசாது என்பதை
Transliteration:
Summa nukisoo 'alaa ru'oosihim laqad 'alimta maa haaa'ulaaa'i yantiqoon(QS. al-ʾAnbiyāʾ:65)
English Sahih International:
Then they reversed themselves, [saying], "You have already known that these do not speak!" (QS. Al-Anbya, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்ராஹீமை நோக்கி) "இவை பேசாது என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றைக் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௫)
Jan Trust Foundation
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவர்கள் தலைகீழாக மாறினர். (திகைத்தனர், பின்னர் இப்றாஹீமுடைய ஆதாரத்தை வைத்தே அவரிடம்) இவை பேசாது என்பதை நீர் திட்டவட்டமாக அறிவீர்”என்று கூறினர்.