Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௮

Qur'an Surah Al-Anbya Verse 58

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَجَعَلَهُمْ جُذَاذًا اِلَّا كَبِيْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَيْهِ يَرْجِعُوْنَ (الأنبياء : ٢١)

fajaʿalahum
فَجَعَلَهُمْ
So he made them
அவற்றை ஆக்கிவிட்டார்
judhādhan
جُذَٰذًا
(into) pieces
சிறுசிறு துண்டுகளாக
illā
إِلَّا
except
தவிர
kabīran
كَبِيرًا
a large (one)
பெரிய சிலை
lahum
لَّهُمْ
of them
அவர்களுக்குரிய
laʿallahum
لَعَلَّهُمْ
so that they may
அவர்கள்
ilayhi
إِلَيْهِ
to it
அதனளவில்
yarjiʿūna
يَرْجِعُونَ
return
திரும்ப வருவதற்காக

Transliteration:

Faja'alahum juzaazan illaa kabeeral lahum la'allahum ilaihi yarji'oon (QS. al-ʾAnbiyāʾ:58)

English Sahih International:

So he made them into fragments, except a large one among them, that they might return to it [and question]. (QS. Al-Anbya, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக்கூடும் (என்று அதனை மட்டும் உடைக்கவில்லை). (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௮)

Jan Trust Foundation

அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் அவற்றை (உடைக்கப்பட்ட) சிறுசிறு துண்டுகளாக ஆக்கிவிட்டார், அவர்களுக்குரிய பெரிய சிலையைத் தவிர. அவர்கள் அதனளவில் திரும்ப வருவதற்காக (அதை மட்டும் அவர் உடைக்கவில்லை).