Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௬

Qur'an Surah Al-Anbya Verse 56

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِيْ فَطَرَهُنَّۖ وَاَنَا۠ عَلٰى ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ (الأنبياء : ٢١)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
bal
بَل
"Nay
மாறாக
rabbukum
رَّبُّكُمْ
your Lord
உங்களுக்கும் இறைவன்
rabbu
رَبُّ
(is the) Lord
இறைவன்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமியின்
alladhī
ٱلَّذِى
the One Who
எப்படிப்பட்டவன்
faṭarahunna
فَطَرَهُنَّ
created them
அவற்றைப்படைத்தான்
wa-anā
وَأَنَا۠
and I am
நானும் ஒருவன்
ʿalā dhālikum
عَلَىٰ ذَٰلِكُم
to that
இதற்கு
mina l-shāhidīna
مِّنَ ٱلشَّٰهِدِينَ
of the witnesses
சாட்சி கூறுபவர்களில்

Transliteration:

Qaala bar Rabbukum Rabbus samaawaati wal ardil lazee fatarahunna wa ana 'alaa zaalikum minash shaahideen (QS. al-ʾAnbiyāʾ:56)

English Sahih International:

He said, "[No], rather, your Lord is the Lord of the heavens and the earth who created them, and I, to that, am of those who testify. (QS. Al-Anbya, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன் வானங்களையும், பூமியையும் படைத்து வளர்ப்பவன்தான். (இந்த சிலைகளன்று.) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௬)

Jan Trust Foundation

“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: மாறாக, வானங்கள் இன்னும் பூமியின் இறைவன்தான் உங்களுக்கும் இறைவன் ஆவான். அவன்தான் அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுபவர்களில் நானும் ஒருவன்.