Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫

Qur'an Surah Al-Anbya Verse 5

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ قَالُوْٓا اَضْغَاثُ اَحْلَامٍۢ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌۚ فَلْيَأْتِنَا بِاٰيَةٍ كَمَآ اُرْسِلَ الْاَوَّلُوْنَ (الأنبياء : ٢١)

bal
بَلْ
Nay
மாறாக
qālū
قَالُوٓا۟
they say
கூறினர்
aḍghāthu
أَضْغَٰثُ
"Muddled
பயமுறுத்துகின்ற
aḥlāmin
أَحْلَٰمٍۭ
dreams;
கனவுகள்
bali
بَلِ
nay
மாறாக
if'tarāhu
ٱفْتَرَىٰهُ
he (has) invented it;
இதை இட்டுக்கட்டுகிறார்
bal
بَلْ
nay
மாறாக
huwa
هُوَ
he
இவர்
shāʿirun
شَاعِرٌ
(is) a poet
ஒரு கவிஞர்
falyatinā
فَلْيَأْتِنَا
So let him bring us
ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும்
biāyatin
بِـَٔايَةٍ
a sign
ஓர் அத்தாட்சியை
kamā
كَمَآ
like what
போன்று
ur'sila
أُرْسِلَ
was sent
அனுப்பப்பட்டது
l-awalūna
ٱلْأَوَّلُونَ
(to) the former"
முந்தியவர்கள்

Transliteration:

Bal qaalooo adghaasu ahlaamim balif taraahu bal huwa shaa'irun falyaatinaa bi Aayatin kamaa ursilal awwaloon (QS. al-ʾAnbiyāʾ:5)

English Sahih International:

But they say, "[The revelation is but] a mixture of false dreams; rather, he has invented it; rather, he is a poet. So let him bring us a sign just as the previous [messengers] were sent [with miracles]." (QS. Al-Anbya, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(தவிர, அவர்கள் நம்முடைய வசனங்களைப் பற்றி) "இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்கள்) என்றும், நம்முடைய தூதர் இதனைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் வந்த தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்! (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫)

Jan Trust Foundation

அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, (அவர்களில் சிலர்) கூறினர்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” மாறாக, (மற்றும் சிலர் கூறினர்:) “இவர் (-முஹம்மது இறைவன் மீது) இதை இட்டுக்கட்டுகிறார்.” மாறாக, (வேறு சிலர் கூறினர்): “இவர் ஒரு கவிஞர். ஆகவே, முந்தியவர்கள் அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.”