Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௫

Qur'an Surah Al-Anbya Verse 45

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّمَآ اُنْذِرُكُمْ بِالْوَحْيِۖ وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَاۤءَ اِذَا مَا يُنْذَرُوْنَ (الأنبياء : ٢١)

qul
قُلْ
Say
கூறுவீராக
innamā
إِنَّمَآ
"Only
எச்சரிப்பதெல்லாம்
undhirukum
أُنذِرُكُم
I warn you
எச்சரிப்பதெல்லாம் உங்களை
bil-waḥyi
بِٱلْوَحْىِۚ
by the revelation"
வஹீ ன் மூலமாகத்தான்
walā yasmaʿu
وَلَا يَسْمَعُ
But not hear
செவிசாய்க்க மாட்டார்கள்
l-ṣumu
ٱلصُّمُّ
the deaf
செவிடர்கள்
l-duʿāa
ٱلدُّعَآءَ
the call
அழைப்புக்கு
idhā
إِذَا
when
போது
mā yundharūna
مَا يُنذَرُونَ
when they are warned
எச்சரிக்கப்படும்

Transliteration:

Qul innamaaa unzirukum bilwahyi; wa laa yasma'us summud du'aaa'a izaa maa yunzaroon (QS. al-ʾAnbiyāʾ:45)

English Sahih International:

Say, "I only warn you by revelation." But the deaf do not hear the call when they are warned. (QS. Al-Anbya, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி "வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீயின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவைகளையே! (நான் சுயமாக ஒன்றும் கூறவில்லை)" என்று நீங்கள் கூறுங்கள். (எனினும், இவர்கள் செவிடர்களைப்போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தால் அதனை அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪௫)

Jan Trust Foundation

“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். செவிடர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின் சத்திய) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள்.