குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௩
Qur'an Surah Al-Anbya Verse 43
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَاۗ لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا يُصْحَبُوْنَ (الأنبياء : ٢١)
- am lahum
- أَمْ لَهُمْ
- Or have they
- அவர்களுக்கு உண்டா
- ālihatun
- ءَالِهَةٌ
- gods
- கடவுள்கள்
- tamnaʿuhum
- تَمْنَعُهُم
- (to) defend them
- பாதுகாக்கின்ற/ அவர்களை
- min dūninā
- مِّن دُونِنَاۚ
- from Us?
- நம்மை அன்றி
- lā yastaṭīʿūna
- لَا يَسْتَطِيعُونَ
- Not they are able
- இயலமாட்டார்கள்
- naṣra
- نَصْرَ
- (to) help
- உதவுவதற்கே
- anfusihim
- أَنفُسِهِمْ
- themselves
- தங்களுக்கு
- walā
- وَلَا
- and not
- இன்னும்
- hum
- هُم
- they
- அவர்கள்
- minnā
- مِّنَّا
- from Us
- நம்மிடமிருந்து
- yuṣ'ḥabūna
- يُصْحَبُونَ
- can be protected
- பாதுகாக்கப்பட மாட்டார்கள்
Transliteration:
Am lahum aalihatun tamna'ulum min dooninaa; laa yastatee'oona nasra anfusihim wa laa hum minnna yus-haboon(QS. al-ʾAnbiyāʾ:43)
English Sahih International:
Or do they have gods to defend them other than Us? They are unable [even] to help themselves, nor can they be protected from Us. (QS. Al-Anbya, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
இவர்களை (நம்முடைய வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மையன்றி இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வமெனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை அவர்களுக்குத் துணைபுரியாது. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪௩)
Jan Trust Foundation
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களை (நம்மிடமிருந்து) பாதுகாக்கின்ற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? அவர்கள் (-அந்த கடவுள்கள்) தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள்.