Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௫

Qur'an Surah Al-Anbya Verse 35

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۗوَاِلَيْنَا تُرْجَعُوْنَ (الأنبياء : ٢١)

kullu
كُلُّ
Every
ஒவ்வோர்
nafsin
نَفْسٍ
soul
ஆன்மாவும்
dhāiqatu
ذَآئِقَةُ
(will) taste
சுவைக்கக் கூடியது
l-mawti
ٱلْمَوْتِۗ
[the] death
மரணத்தை
wanablūkum
وَنَبْلُوكُم
And We test you
நாம் சோதிப்போம் உங்களை
bil-shari
بِٱلشَّرِّ
with [the] bad
துன்பத்தைக் கொண்டு
wal-khayri
وَٱلْخَيْرِ
and [the] good
இன்னும் இன்பத்தைக்கொண்டு
fit'natan
فِتْنَةًۖ
(as) a trial;
சோதிப்பதற்காக
wa-ilaynā
وَإِلَيْنَا
and to Us
நம்மிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Kullu nafsin zaaa'iqatul mawt; wa nablookum bishsharri walkhairi fitnatanw wa ilainaa turja'oon (QS. al-ʾAnbiyāʾ:35)

English Sahih International:

Every soul will taste death. And We test you with evil and with good as trial; and to Us you will be returned. (QS. Al-Anbya, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிக்கிறோம். பின்னர் நீங்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதாகும். சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.