Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௪

Qur'an Surah Al-Anbya Verse 34

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَۗ اَفَا۟ىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ (الأنبياء : ٢١)

wamā jaʿalnā
وَمَا جَعَلْنَا
And not We made
நாம் ஆக்கவில்லை
libasharin
لِبَشَرٍ
for any man
எந்த மனிதருக்கும்
min qablika
مِّن قَبْلِكَ
before you before you
உமக்கு முன்னர்
l-khul'da
ٱلْخُلْدَۖ
[the] immortality
நிரந்தரத்தை
afa-in
أَفَإِي۟ن
so if
இருந்து விடுவார்களா
mitta
مِّتَّ
you die
நீர்மரணித்துவிட்டால்
fahumu l-khālidūna
فَهُمُ ٱلْخَٰلِدُونَ
then (would) they live forever?
அவர்கள் நிரந்தரமானவர்களாக

Transliteration:

Wa maa ja'alnaa libasharim min qablikal khuld; afaimmitta fahumul khaalidoon (QS. al-ʾAnbiyāʾ:34)

English Sahih International:

And We did not grant to any man before you eternity [on earth]; so if you die – would they be eternal? (QS. Al-Anbya, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னரும் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இவர்கள் என்றென்றும் வாழப் போகிறார்களா? (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் (இப்பூமியில்) நிரந்தரத்தை நாம் ஆக்கவில்லை. ஆகவே, நீர் மரணித்து விட்டால் அவர்கள் (இப்பூமியில்) நிரந்தரமானவர்களாக இருந்து விடுவார்களா?