Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௧

Qur'an Surah Al-Anbya Verse 31

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِيَ اَنْ تَمِيْدَ بِهِمْۖ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ (الأنبياء : ٢١)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We (have) placed
இன்னும் நாம் ஏற்படுத்தினோம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
rawāsiya
رَوَٰسِىَ
firmly set mountains
மலைகளை
an tamīda
أَن تَمِيدَ
lest it (should) shake
அது சாய்ந்து விடாமல் இருப்பதற்காக
bihim
بِهِمْ
with them
அவர்களுடன்
wajaʿalnā
وَجَعَلْنَا
and We made
ஏற்படுத்தினோம்
fīhā fijājan
فِيهَا فِجَاجًا
therein broad passes
அதில்/விசாலமான
subulan
سُبُلًا
(as) ways
பாதைகளை
laʿallahum yahtadūna
لَّعَلَّهُمْ يَهْتَدُونَ
so that they may (be) guided
அவர்கள் வழிபெறுவதற்காக

Transliteration:

Wa ja'alnaa fil ardi rawaasiya an tameeda bihim wa ja'alnaa feehaa fijaajan subulal la'allahum yahtadoon (QS. al-ʾAnbiyāʾ:31)

English Sahih International:

And We placed within the earth firmly set mountains, lest it should shift with them, and We made therein [mountain] passes [as] roads that they might be guided. (QS. Al-Anbya, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம் ஏற்படுத்தினோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

இன்னும்| இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியில் நாம் மலைகளை ஏற்படுத்தினோம், அது (-பூமி) அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக. இன்னும் நாம் அவர்களுக்கு அதில் (-பூமியில்) விசாலமான பாதைகளை, அவர்கள் (அவற்றில் செல்ல) வழிபெறுவதற்காக ஏற்படுத்தினோம்.